மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா.. இந்தியாவில் 4வது டோஸ் தடுப்பூசி அவசியமா? மருத்துவர்கள் பதில் இதுதான்?
டெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் விமான பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் நான்காவது டோஸ் தடுப்பூசி அவசியமா? என்கிற கேள்வி பரவலாக மேலெழுந்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்று வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு பின்னர் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இவ்வாறு இருக்கையில், கொரோனா தொற்றின் திரிபுகள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும், சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றன.

நான்காவது டோஸ்
தடுப்பூசிகள் மூலம் இந்த திரிபு வைரஸ்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று விஞ்ஞானிகள் புலம்பி வரும் நிலையில், இந்தியாவில் நான்காவது டோஸ் தடுப்பூசி அவசியமா? என்கிற கேள்வி மேலெழுந்திருக்கிறது. நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 4.46 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியை பொறுத்த அளவில் இதுவரை 69.9 சதவிகிதம் பேர்தான் முழுமையான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வெறும் 27 சதவிகிதம் பேர்தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே மற்றொரு கொரோனா அலைக்கான அச்சம் மேலெழுந்துள்ள நிலையில் நான்காவது டோஸ் குறித்த கேள்விகள் எழுந்திருக்கின்றன.

பேட்டி
ஆனால் அதன் பின்னர் இந்த தொற்று பாதிப்பானது உருமாற தொடங்கியது. அப்படி உருவானதுதான் ஒமிக்ரான். மட்டுமல்லாது தற்போது இந்த வைரஸ் பல்வேறு வடிவங்களை பெற்றிருக்கிறது. ஆக இதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பைவலன்ட் தடுப்பூசி. இது ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். அதேபோல பூஸ்டர் தடுப்பூசிகளை பொறுத்த அளவில் இது குறைந்த கால செயல்திறனை கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே மற்ற நாடுகளை பார்த்து நாமும் இதேபோல நான்காவது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று கூறியுள்ளனர்.

விளக்கம்
ஆனால் அதன் பின்னர் இந்த தொற்று பாதிப்பானது உருமாற தொடங்கியது. அப்படி உருவானதுதான் ஒமிக்ரான். மட்டுமல்லாது தற்போது இந்த வைரஸ் பல்வேறு வடிவங்களை பெற்றிருக்கிறது. ஆக இதனை கருத்தில் கொண்டு உருவாக்க்பட்டதுதான் பைவலன்ட் தடுப்பூசி. இது ஒமிக்ரான் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். அதேபோல பூஸ்டர் தடுப்பூசிகளை பொறுத்த அளவில் இது குறைந்த கால செயல்திறனை கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே மற்ற நாடுகளை பார்த்து நாமும் இதேபோல நான்காவது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று கூறியுள்ளனர்.

சர்வதேச நிலைமை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் இதுவரை ஏறத்தாழ 10 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. மூன்றாவதாக பிரான்ஸ் இருக்கிறது. இந்நாட்டில் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 3.79 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல ஜப்பானிலும் கடந்த 24 மணி நேரத்தில் 1.87 லட்சம் பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications