குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு இதுதான் காரணமா? விரைவில் விசாரணை ரிப்போர்ட்
டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 14 பேர் மணமடைந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாமென தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி , MI-17V5 ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சென்ற போது மோசமான வானிலை நெஞ்சன்பசத்திரம் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகே குரூப் கேப்டன் வருண் சிங்கும் மருத்துவமனையில் வீர மரணமடைந்தார்.

விசாரணை குழு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஏர் மார்ஷல் மன்வீந்தர் சிங் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த கருப்பு பெட்டி மற்றும் விபத்து நடந்த இடத்தில் விசாரணை குழுவினர் தீவிர ஆய்வு மற்றும் விசாரணையில் ஈடுபட்டனர். விபத்து நடந்தபோது எடுக்கப்பட்டு பின்னர் வீடியோக்களில் தெளிவாக பறந்து சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், மேகக்கூட்டத்திற்கு சென்ற பின்னர் விபத்து ஏற்பட்டதும் விசாரணையின் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம்
நீண்ட ஆய்வுக்குப் பிறகு ஜெனரல் பிபி ராவத் உள்ளிட்டோரின் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து விமான பயணி விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை அல்லது அதன் அறிக்கை குறித்து விமானப்படையோ அரசோ இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

மோசமான வானிலை
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பார்வைத்திறன் குறைந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் விமானியின் தவறு தான் விபத்துக்கு அடிப்படை காரணமா அல்லது மலைப்பாங்கான பகுதிகளில் மேகங்களுக்குள் ஹெலிகாப்டர் பறக்கும்போது செயல்படுத்தப்பட வேண்டிய விதிமுறைகள் புறக்கணிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்த விளக்கங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சிஐஎஃப்டி வகை விபத்து
அதேநேரத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் இயந்திர குறைபாடுகள் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், சீரற்ற காலநிலையால் ஹெலிகாப்டர் திசை திருப்பப்பட்ட போது தற்செயலாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஏர் மார்ஷல் மன்வீந்தர்சிங் தலைமையிலான விசாரணைக் குழு முடிவுக்கு வந்து இருப்பதாகவும், இந்த விபத்து சிஎஃப்ஐடி என்ற வகை விபத்து என கூறப்படுகிறது. அதாவது நிலப்பகுதிக்குள் கட்டுப்படுத்தப்பட்ட விமான விபத்து என தகவல் வெளியாகி உள்ளது.

5 நாட்களில் அறிக்கை
இந்நிலையில் விசாரணைக் குழுவிற்கு விமானப்படையின் சட்டத்துறை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் , அறிக்கை இறுதி செய்யப்பட்டு 5 நாட்களுக்குள் ஏர் சீஃப் மர்ஷல் வி.அர்.செளதரியிடம் சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பின்னரே விபத்து குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications