டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாமியாவில் மாணவர்களை சுட்டவருக்கு யார் காசு கொடுத்தது.. சொல்லுங்கள்.. ராகுல் காந்தி பரபரப்பு கேள்வி

டெல்லி ஜாமியா மிலியா பல்கலையில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபாலுக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி ஜாமியா மிலியா பல்கலையில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ராம் பகத் கோபாலுக்கு யார் பணம் கொடுத்தது என்று காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லி ஜாமியா மிலியா துப்பாக்கி சூடு நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது.

vaJamia Firing: Who gave money to the shooter asks Rahul Gandhi

நேற்று இந்த போராட்டத்தில் ராம் பகத் கோபால் என்ற நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார். இந்த துப்பாக்கி சூட்டிற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த எம்பி ராகுல் காந்தி, துப்பாக்கியால் அங்கே மாணவர்களை சுட்டவருக்கு காசு கொடுத்தது யார் என்று கேட்டார். முன்னதாக ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் செய்யும் மக்கள் பாஜக கட்சி விமர்சனம் செய்து வந்தது. அங்கு போராடும் மக்களுக்கு யாரோ காசு கொடுக்கிறார்கள்.

டெல்லி ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு நடத்திய ராம்பகத் கோபால் பஜ்ரங் தள் பேரணியில் பங்கேற்றவர்டெல்லி ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூடு நடத்திய ராம்பகத் கோபால் பஜ்ரங் தள் பேரணியில் பங்கேற்றவர்

அவர்களுக்கு தினமும் 500 ரூபாய் காசு கொடுத்து போராட்டம் செய்ய அழைத்து வருகிறார்கள். அதுதான் போராட்டம் இத்தனை நாள் நடக்க காரணம் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதற்கு பதிலடி தரும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்னொரு டிவிட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காந்திஜியின் மேற்கோள் ஒன்றை இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் வன்முறையை நம்பும் ஆள் கிடையாது. அதனால் என்னால் வன்முறையை போதிக்க மஜூடியாது. நான் உங்களுக்கு ஒன்றுதான் சொல்ல முடியும். எப்போதும் தலை நிமிர்ந்து இருங்கள். யாருக்காகவும் தலை குனிய வேண்டாம். உங்கள் உயிரே போனாலும் தலை குனிய வேண்டாம், என்று ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.

English summary
Jamia Firing: Who gave money to the shooter asks Rahul Gandhi, Congress MP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X