ஜேஇஇ தேர்வு முறைகேடு.. டிசிஎஸ் சாப்ட்வேரை ஹேக் செய்த ரஷ்ய நபர்.. டெல்லியில் சுற்றி வளைத்தது சிபிஐ!
டெல்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ தேர்வின் போது டிசிஎஸ் சாப்ட்வேரை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய நபரை டெல்லியில் சுற்றி வளைத்து கைது செய்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி மற்றும் ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு என இரு கட்டமாக ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்த தேர்வை ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர்.

ஜே.இ.இ தேர்வு
ஐ.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், ஜே.இ.இ தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த தேர்வுகள் கணிணி வழியில் நடத்தப்படுகிறது. டிசிஎஸ் நிறுவனத்தின் iLeon software(மென்பொருள்) மூலமாக இந்த தேர்வுகளை தேர்வு முகமை நடத்துகிறது.

ஹேக் செய்து முறைகேடு
அதன்படி கடந்த ஆண்டு (2021) நடந்த ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில், அந்த தேர்வில் மென்பொருளை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அஃபினிடி எஜிகேஷன் என்ற தனியார் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குனர்களான சித்தார்த் கிருஷ்ணா, விஷ்வம்பர் மனி திரிபாதி மற்றும் கோவிந்த் வர்ஷ்னே உள்ளிடோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 10 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் மோசடி நடைபெற்றதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியில் கைது
ஜேஇஇ ஆன்லைன் தேர்வில் ரூ.10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பெற்றுக்கொண்டு வினாத்தாளை அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் ரிமோட் அக்சஸ் முறையில் நிரப்பி கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்யபட்டது. மேற்கூறிய மூன்று பேரும் மேலும் சிலருடன் இணைந்து இந்த சதிச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் iLeon software ஹேக் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்ய நாட்டை சேர்ந்த மிகைல் ஷர்கின் என்பவரை டெல்லி விமான நிலையத்தில் சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

சிபிஐ அறிக்கை வெளியீடு
இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2021 ஆம் ஆண்டு ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வில் ஹேக்கிங் நடைபெற்ற வழக்கில் முக்கிய நபரான மிகைல் ஷர்கின் இவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. கஜகஸ்தானில் இருந்து டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்த இவரை இமிகிரேஷன் அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்தனர். சிபிஐ மிகைல் ஷர்கினை விசாரணை நடத்தி வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகைல் ஷர்கினை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications