டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசுத் தலைவரை திடீர் என்று சந்தித்த காஷ்மீர் ஆளுநர்.. அவசர ஆலோசனை!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திடீர் என்று சந்திப்பு நடத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் திடீர் என்று சந்திப்பு நடத்தி உள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்குவதாக மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, பருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Kashmir Governor meets President Ram Nath Govind

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் தற்போது நிறைய கட்டுப்பாடுகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்திப்பு நடத்தினார்.

காஷ்மீர் நிலவரம் குறித்து சத்யபால் மாலிக் குடியரசு தலைவரிடம் விளக்கினார். காஷ்மீரில் சட்டஒழுங்கு எப்படி இருக்கிறது. அங்கு அரசியல் நிலவரம் எப்படி உள்ளது. மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்.

பாகிஸ்தான் எல்லை பகுதியில் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆளுநர் விளக்கி உள்ளார். காஷ்மீரில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் குறித்தும் இதில் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

காஷ்மீர் பிரச்சனை தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் அடுத்து மத்திய அரசு என்ன செய்யும், அங்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அதனால்தான் இந்த சந்திப்பு நடக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

English summary
Jammu Kashmir Governor meets President Ram Nath Govind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X