டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊழல் அமைச்சருக்கு சலுகை..பை ஒன் கெட் ஒன் சாராயம்..டெல்லியில் ஆம் ஆத்மியை போட்டு தாக்கிய குஷ்பு

Google Oneindia Tamil News

டெல்லி: ஊழல் செய்து சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அமைச்சருக்கு டெல்லி அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது என்று பாஜக நிர்வாகி குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய குஷ்பு, பை ஒன் கெட் ஒன் சாராயம் கொடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்குகிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மீது புகார் பட்டியல் வாசித்துள்ளார்.

டெல்லியில் டிசம்பர் 4ஆம் தேதி அன்று மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பை அடைந்திருக்கிறது. பாஜக - ஆம் ஆத்மிக்கு இடையே இத்தேர்தலில் கடும் போட்டி நிலவுகின்றது. காங்கிரஸ் கட்சி களத்தில் இருந்தாலும் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.

பாஜக வேட்பாளரை ஆதரித்து , பாஜக நிர்வாகி மற்றும் நடிகையுமான குஷ்பூ, தமிழர்கள் வசிக்கும் "ஜல் விஹார்" பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஊழல் செய்ததாக கூறி குஷ்பூ, பிரசாரம் செய்தார். அப்போது ஏராளமான பெண்கள், குஷ்பூ உடன் செல்பி எடுத்து கொண்டனர்.

எடப்பாடி சொன்னது முழு பொய்.. பேனர் செலவு ரூ.611.. அதிமுக ஆட்சியில் தான் ஊழல்.. வறுத்தெடுத்த அமைச்சர் எடப்பாடி சொன்னது முழு பொய்.. பேனர் செலவு ரூ.611.. அதிமுக ஆட்சியில் தான் ஊழல்.. வறுத்தெடுத்த அமைச்சர்

பாஜக தேர்தல் பிரசாரம்

பாஜக தேர்தல் பிரசாரம்

ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து பாஜகவின் பிரச்சார தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் குஷ்பு. டெல்லியில் உள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதியான ஜல் விகார், ஆர்கே புரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்பகுதி மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் செய்த ஊழல் குறித்து பிரசாரம் செய்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார் குஷ்பு.

 எதுவும் செய்யவில்லை

எதுவும் செய்யவில்லை

சாராயம் கொடுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்குகிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் குஷ்பு. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிவாழ் தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இலவச சாராயம்

இலவச சாராயம்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, டெல்லி மாநிலத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு சாராயத்தை இலவசமாக கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறது. மற்றபடி மாநிலத்தில் ஒன்றும் வளர்ச்சி திட்டங்கள் இல்லை. இதைத் தவிர அவர்கள் செய்த ஊழலும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. எந்த சிறையிலாவது கைதிக்கு இத்தனை வசதிகள் செய்து கொடுப்பது உண்டா? ஆம் ஆத்மி அமைச்சருக்கு சிறையில் பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகின்றனர்.

குஷ்பு செல்ஃபி

குஷ்பு செல்ஃபி

குஷ்பு பிரச்சாரம் செய்த போது ஏராளமான பெண்களும், பாஜக தொண்டர்களும் குஷ்பு உடன் போட்டோ எடுக்கவும் செல்ஃபி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். அப்போது மொபைல் போனை வாங்கிய குஷ்பு, மேலும் அப்பகுதி மக்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

English summary
BJP leader Khushbu has alleged that the Delhi government is giving various privileges to the minister who is serving prison term for corruption. Khushpu, speaking in the municipal election campaign, has read out a list of complaints against Delhi Chief Minister Arvind Kejriwal that he is giving buy one get one liquor and making him addicted to alcoholism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X