சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும்
டெல்லி: மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சப்ளை பாதிப்புகளைச் சீர் செய்ய மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே குழாய் வழி கனெக்ஷன் வைத்திருப்போருக்கு புதிய எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படாது. அவர்களுக்கு மாற்று சிலிண்டர்களும் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஈரானைத் தாக்குகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் இப்போது சர்வதேச அளவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய சிலிண்டர் இல்லை
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ள சூழலில், குழாய் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு கொண்ட குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல பிஎன்ஜி வைத்திருக்கும் குடும்பங்கள் தங்கள் எல்பிஜி இணைப்பைத் துறக்க வேண்டும் என்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதுபோல பிஎன்ஜி கனெக்ஷன் வைத்திருப்போருக்கு சிலிண்டர்களை நிரப்பக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரவ பெட்ரோலிய எரிவாயு விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.. அதன்படி பிஎன்ஜி பயனர்கள் புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவது தடை செய்யப்படுகிறது. அதில் மேலும், "குழாய் வழி சப்ளை உடன் எல்பிஜி இணைப்பையும் வைத்திருக்கும் எந்தவொரு நபரும், சிலிண்டர்களைப் பெறக் கூடாது. குழாய் வழி கேஸ் சப்ளை உள்ள நபர்கள் தங்கள் உள்நாட்டு எல்பிஜி இணைப்பை உடனடியாகத் துறக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கனெக்ஷனும் தர மாட்டோம்
அதேபோல இப்படி குழாய் வழி கேஸ் கனெக்ஷன் உள்ள யூசர்கள் புதிய கனெக்ஷன் கோரி விண்ணப்பிக்கவும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி விண்ணப்பித்தாலும் அவர்களின் புதிய எல்பிஜி கேஸ் கனெக்ஷன் விண்ணப்பம் பிராசஸ் செய்யப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில், அதைச் சமாளிக்க இது உதவும்.
மேலும், குழாய் வழி கனெக்ஷன் வைத்திருப்போர் ஏற்கனவே எல்பிஜி சிலிண்டர்களை வைத்திருந்தாலும் அதை உடனடியாக திரும்பத் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் குழாய் வழி கனெக்ஷன் வைத்திருப்போருக்கு எல்பிஜி கேஸ் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
நடவடிக்கை
கேஸ் மற்றும் எரிபொருள் சப்ளையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்திருந்தது. இந்த தகவலை ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி உறுதியளித்தார். இதன் காரணமாக வரும் நாட்களில் மத்திய கிழக்கு வழியாக இந்தியா வரும் டேங்கர் கப்பல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இது நிலைமையைச் சமாளிக்க மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும்.
பெரிய சிக்கல்
கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது இந்தியாவுக்கு ஒரு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவைகளில் 60% இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 85-90% சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அனுப்புவதற்கான பாதையாகப் பயன்படுத்துகின்றன. அதை ஈரான் முடக்கியதே இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்குக் காரணம்.
இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி என்பது தற்காலிக தீர்வு தானே தவிர நிரந்தர தீர்வு இல்லை. போர் எப்போது முடிந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி திரும்புகிறதோ.. அப்போது தான் நிலைமை முழுமையாகச் சரியாகும்!
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications