காங்கிரஸ் கட்சியை நெருக்கடியில் இருந்து ராகுல் காந்தியால் மட்டுமே மீட்க முடியும்: மல்லிகார்ஜூன கார்கே!
டெல்லி: தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால் மட்டுமே மீட்க முடியும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் விலகுவது அக்கட்சிக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதோடு, ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி
இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியும் இறுதி செய்யப்பட்டது. இதன்படி, தேர்தலுக்கான அறிவிக்கை செப்டம்பரில் 22 ஆம் தேதி வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

அக்டோபர் 17-ந் தேதி
செப்டம்பர் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறும். அக்டோபர் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறுகிற நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பதாக பரவலாக பேசப்படுகிறது. எனினும் இது குறித்து ராகுல் காந்தி இதுவரை வெளிப்படையாக பேசவில்லை.

மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கே இதுபற்றி கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் தொடர்பான ஒட்டுமொத்த சூழலும் தெளிவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை இந்த நெருக்கடியான தருணத்தில் ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்.

ராகுல் காந்தியால் மட்டுமே முடியும்
இது தான் எனது தனிப்பட்ட விருப்பமும் கூட. கட்சியினரின் எண்ணமும் இது தான். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். குறிப்பாக கட்சியை ஒருங்கிணைத்து மேலும் பலப்படுத்த ராகுல் காந்தியால் மட்டுமே முடியும். பாரத் ஜோடோ யாத்திரையில் கூட கட்சியினரை திரள வைக்கும் திறன் அவருக்கு மட்டுமே உள்ளது" என்றார்.
-
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications