துணை ஜனாதிபதி ரேஸில் ஜெகதீப் தன்கர்! மேற்கு வங்க ஆளுநராக இல.கணேசன்! மம்தாவுடன் போட்டிக்கு தயார்?
டெல்லி : மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப்தங்கர் பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் நிலையில் மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்குவங்க ஆளுநர் பொறுப்பையும் சேர்ந்து கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்காக பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19 டைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகதீப் தன்கர் அறிவிப்பு
குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜக சார்பில் இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கு வழங்கலாமா அல்லது முக்தார் அப்பாஸ் நக்விக்கு வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் தான் மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராஜினாமா
இதனையடுத்து மேற்குவங்காள கவர்னர் பதவியை ஜெகதீப் தன்கர் இன்று ராஜினாமா செய்தார். இதுகுறித்த கடிதத்தை ஜெகதீப் தன்கர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்நிலையில், மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் மேற்கு வங்காள கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இல.கணேசன் நியமனம்
சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு, மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டார். பாஜக மூத்த தலைவரான இல கணேசன், மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழக பாஜக தலைவராகவும் பணியாற்றியுள்ளா. இந்நிலையில் அவர் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications