உலகின் பழமையான மொழி தமிழ்.. நான் தமிழ் ரசிகன்.. மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
டெல்லி: உலகின் மிகப் பழமையான மொழி நம்முடையது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும், நான் தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி, தமிழ் மொழி குறித்து பெருமை அடைகிறேன் என்று, பிரதமர் நரேந்திர மோடி தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் என்று பொருள்படும் மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் மாதம் ஒருமுறை ஞாயிற்றுக்கிழமை மோடி உரையாற்றுவது வழக்கம். இன்று அவர் தனது உரையின்போது, தமிழ்நாடு குறித்தும் தமிழ் மொழி குறித்தும் தான் பேசியதை தொகுத்து சென்னையை சேர்ந்த குரு பிரசாத் புத்தகத்தை வெளியிட்டு உள்ளார் என்பதை குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், குருபிரசாத் முயற்சியை நினைத்து, நெகிழ்கிறேன்.

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. அந்த மொழி நம்முடையது என்பதை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும், நான் தமிழ் மொழியின் மிகப்பெரிய அபிமானி, தமிழ் மொழி குறித்து பெருமை அடைகிறேன். இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்தார்.

குரு பிரசாத் தன்னுடைய புத்தகத்தை நமோ ஆப் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளாராம்.
மேலும், pdf இந்த பிடிஎப் ஃபைலில் அவரது கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதை நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications