எனக்கு ஒரு நியூஸ் கிடைச்சிருக்கு.. கொல்லப்படும் முன்பாக மெசேஜ் செய்த ஷர்த்தா.. வெளியான திடுக் தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஷ்ரத்தா கொலை வழக்கில், தினம் தினம் புதுப்புதுப் தகவல் வெளியாகி வருகிறது. ஷ்ரத்தா கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு வரை தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் அப்தாப் அமீன் (வயது 28). மும்பை கால் செண்டரில் பணியாற்றிய போது ஷ்ரத்தா என்ற பெண்ணை காதலித்தார்.
டெல்லியில் லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி சண்டையும் நடைபெற்று வந்துள்ளது.

35 துண்டுகளாக உடலை வெட்டி..
ஒரு கட்டத்தில் ஷர்த்தாவை கொடூரமாக கொலை செய்த அப்தாப் அமீன், ஷர்த்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, அங்குள்ள வனப்பகுதியில் வீசியதும் அம்பலமானது. ஷரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த கொடுர கொலை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தக் கொலையை மறைப்பதற்காக அப்தாப் மேற்கொண்ட யுக்திகள் ஒரு கிரைம் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

துர்நாற்றத்தை மறைக்க ஊதுபத்திகள்
ஷ்ரத்தாவின் உடலை வைப்பதற்கு என்றே பிரிட்ஜ் ஒன்றை வாங்கியது, துர்நாற்றத்தை மறைப்பதற்கு ஊதுபத்திகள் கொளுத்தி வீடு முழுக்க வைத்திருந்த சம்பவங்களும் போலீஸ் விசாரணையில் வெளி வந்தன். இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்த ஒவ்வொரு சம்பவமாக வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சி அளித்து வருகிறது. தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு அப்தாப் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ்
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் ஷ்ரத்தா தனது நண்பருக்கு அனுப்பிய கடைசி மெசேஜ்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்பு வரை அதாவது மே 18 ஆம் தேதி வரை ஷர்த்தா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வந்தது தெரியவந்து இருக்கிறது. ஷர்த்தா கொலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக தனது நண்பருக்கு, இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

எந்த பதிலும் வரவில்லை
அந்த மெசேஜில், "டியூட், எனக்கு ஒரு செய்தி கிடைத்து இருக்கிறது. நான் மிகவும் பிஸியாகிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். அதே நாளில் மாலை 6.29 மணியளவில், ஷர்த்தாவின் நண்பர், மெசேஜில், அது என்ன செய்தி? என்று கேட்டு இருக்கிறார். ஆனால், ஷரத்தாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பதறிப்போன ஷ்ரத்தாவின் நண்பர், அப்தாப்பை தொடர்பு கொண்டு அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதி, ஷ்ரத்தாவை பற்றி விசாரித்து இருக்கிறார்.

எனக்கு போன் பண்ணுங்க...
ஆனால், அப்தாப் உரிய முறையில் பதில் அளிக்காமல் இருந்து உள்ளர். இதனால், எனக்கு போன் பண்ணுங்க... என்று அப்தாப்பிடம் ஷ்ரத்தாவின் நண்பர் கூறியிருக்கிறார். இதற்கும் அப்தாப் எந்த பதிலும் அளிக்காததால் , நேரடியாக அப்தாப்பிற்கு அவரே போன் செய்து இருக்கிறார். ஆனால், அப்தாப் போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால், சங்கடம் அடைந்த ஷர்த்தாவின் நண்பர், இன்ஸ்டாகிரமில் ஷ்ரத்தாவிற்கு மெசேஜ் செய்துள்ளார்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க
எங்கே இருக்கிறாய்.. ஒன்னும் பிரச்சினை இல்லையே? என்று கேட்டு இருக்கிறார். ஆனால், இந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால், அவரும் பதற்றம் அடைந்து இருக்கிறார். ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகும், ஜூன் மாதம் வரை அப்தாப் அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை பயன்படுத்தியிருக்கிறார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக அப்தாப், ஷர்த்தாவின் இன்ஸ்டாகிரம் அக்கவுண்டை பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

முக்கிய தடயங்கள்
ஷ்ரத்தா கொலை வழக்கில் தினம் தினம் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது. இந்தக் கொலை வழக்கில் தொடர்ந்து ஆதாரங்களை போலீசார் திரட்டி வரும் நிலையில், முக்கிய தடயம் ஒன்றை போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர். அதாவது அப்தாப் வசித்து வந்த பிளாட்டில் இரத்தக்கறை உள்ளிட்ட முக்கிய தடயங்கள் சிக்கியிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications