டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாரியில் தொங்கியபடி.. ஒரு கையில் கயிறு..மறு கையில் பிள்ளை.. தவிக்கும் தந்தை.. கலங்கடித்த புகைப்படம்!

Google Oneindia Tamil News

டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் வந்து எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பதை விளக்க இந்த ஒரு படம் போதுமே!

Recommended Video

    லாரியில் தொங்கியபடி.. ஒரு கையில் கயிறு..மறு கையில் பிள்ளை.. தவிக்கும் தந்தை - வீடியோ

    டெல்லி, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மற்ற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து கட்டடத் தொழில், ஆலைகள், தொழிற்சாலைகள், பாதுகாப்பு பணி என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் வேலையில்லாமல், பணமுமில்லாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் சொந்த மாநிலங்களுக்கே சென்று வருகிறார்கள்.

    யாரும் கையில் எடுக்காத ஐடியா.. பிறமாநில தொழிலாளர்களுக்கு ஒடிசா கொடுத்த டாஸ்க்.. நவீன் பட்நாயக் செம!யாரும் கையில் எடுக்காத ஐடியா.. பிறமாநில தொழிலாளர்களுக்கு ஒடிசா கொடுத்த டாஸ்க்.. நவீன் பட்நாயக் செம!

    அண்டைய மாநிலம்

    அண்டைய மாநிலம்

    வெகு தொலைவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ரயில்கள் இயக்கப்படுகின்றன. அது போல் அண்டைய மாநில தொழிலாளர்களை அனுப்ப லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இன்னும் சிலரோ இதையெல்லாம் எதிர்பார்க்காமல் நடந்தும் சைக்கிளிலும் சென்று வந்தார்கள்.

    லாரி மூலம்

    லாரி மூலம்

    இந்த நிலையில் சண்டீகரிலிருந்து லாரி மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். அப்போது கூட்டநெரிசலில் லாரியில் இருந்த கயிறு மூலம் ஒரு நபர் ஏறுகிறார், அவரிடம் கைக் குழந்தையை அவரது மனைவி கொடுக்கிறார். அவர் ஒரு கையில் குழந்தை, மறு கையில் கயிறு.

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    இதையடுத்து அந்த நபரின் அவதியை பார்த்து அந்த குழந்தையை ஏற்கெனவே லாரியில் ஏறியிருந்த ஒருவர் பெற்றுக் கொள்கிறார். புடவையில் உள்ள ஒரு பெண் லாரியில் ஏற தவிக்கிறார். இப்படியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் சொல்லொண்ணா துயரில் உள்ளனர்.

    கஷ்டம்

    கஷ்டம்

    சுமார் 20 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பார்ப்போரை கலங்கடிக்கிறது. இது போல் நாடு முழுவதும் நடைபெறும் நிலையில் இதுகுறித்து தெலுங்கானாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கேட்ட போது வேறு வழியில்லை. அதனால் இத்தனை கஷ்டப்பட்டு ஊருக்கு செல்கிறோம்.

    இளைப்பாற

    இளைப்பாற

    நாங்கள் என்ன செய்வது. எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை என்கிறார் ஒரு பெண். கடந்த வாரம் மகாராஷ்டிராவிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு ரயில் தண்டவாளம் வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் இளைப்பாற ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    அப்போது அவர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 பேர் பலியாகினர். அது போல் கடந்த ஞாயிற்றுக்கிழமை லாரியில் சொந்த ஊருக்கு சென்ற போது லாரி குப்புற கவிழ்ந்து 20 பேர் பலியாகினர். இப்படி ஆபத்தான வகையில் பயணம் செய்து தங்கள் உயிர்களை விடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.

    English summary
    Coronavirus lockdown: jobless migrants returning to their native places. A man lifts baby to get into the truck.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X