டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாலியன் வாலாபாக் படுகொலை.. 100வது ஆண்டு நினைவுநாள்.. ராகுல் நேரில் அஞ்சலி.. மோடி டுவிட்டரில் அஞ்சலி

Google Oneindia Tamil News

டெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி ராகுல் காந்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பேச்சுரிமை உள்பட அனைத்து உரிமைகளையும் பறிக்கும் ரவுலட் சட்டத்தை எதிர்த்து 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் ஒரு அமைதியான பொதுக் கூட்டம் நடந்தது.

இங்கு கூடியிருந்தவர்களை கலைந்து போகுமாறு ஆங்கிலேய அரசு கூறியது. ஆனால் அவர்கள் நகராததை அடுத்து 10 நிமிடங்களுக்கு 1600 ரவுண்டுகள் பீரங்கியால் சுட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

திருடர்களையும் திருட்டுத்தனத்தையும் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளிநான்- மோடி பெருமிதம் திருடர்களையும் திருட்டுத்தனத்தையும் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளிநான்- மோடி பெருமிதம்

டுவிட்டரில்

இவர்களின் உயிர்த்தியாகம் நிகழ்ந்து இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகிறது. இந்த நூற்றாண்டு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நினைவு

நினைவு

அவர் கூறுகையில் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு மேலும் கடுமையாக உழைக்க ஜாலியன் வாலாபாக் நினைவு உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மவுன அஞ்சலி

மவுன அஞ்சலி

அதுபோல் ராகுல்காந்தி பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினார்.

சக்தி

சக்தி

ஜாலியன் வாலாபாக் நினைவுச் சின்னம் அருகே வைக்கப்பட்டுள்ள விசிட்டர்ஸ் புத்தகத்தில் குறிப்பு ஒன்றை ராகுல் காந்தி எழுதினார். அதில் அவர் கூறுகையில் சுதந்திரத்திற்காக இந்த தியாகிகள் கொடுத்த விலை ஒருபோதும் ஒருநாளும் மறக்கப்படாது. சுதந்திரத்திற்காக, தங்களிடம் உள்ள அனைத்து சக்தியையும் கொடுத்த இந்திய மக்களை வணங்குகிறோம். ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டார்.

பிரிட்டன் தூதர் வருத்தம்

பிரிட்டன் தூதர் வருத்தம்

இதையடுத்து பிரிட்டன் நாட்டின் தூதர் டொமினிக் அஸ்க்குத் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு நேரில் வந்து மலர் வளையம் வைத்து உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார். அப்போது இந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தார்.

English summary
PM Narendra Modi and Rahul Gandhi pays their tributes for 100 years of Jallianwala Bagh massacre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X