டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு 200.. பாஜகவுக்கு 1000.. அடேங்கப்பா அதிரடி திட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மோடிக்கு 200 பிரச்சார கூட்டங்கள், பாஜகவுக்கு 1000 கூட்டங்கள் என பாஜக அதிரடியாக திட்டங்களைத் தீட்டியுள்ளதாம்.

17 வது மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. வாக்காள பெருங்குடி மக்களை கவர மாண்புமிகுக்கள் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். மன்புமிகுக்களே இப்படியென்றால் கட்சிகளின் வியூகங்கள் இதற்கு ஒருபடி மேலே சென்று பட்டையை கிளப்பி வருகிறது.

 Modi to hold 200 campaign meetings for LS polls

தேசிய கட்சிகளுள் ஒன்றும் ஆளும் கட்சியாகவும் இருந்து வரும் பாஜக தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது. கடந்த 10 ம் தேதிதான் மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழகத்திற்கு மட்டும் 4 முறை வந்து அரசு மற்றும் கட்சி விழாக்களிலும் கலந்து கொண்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி.

இந்த நிலையில் பாஜக தனது தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளது. அதன்படி மோடி மட்டும் 200 கூட்டங்களில் கலந்து கொள்ளும் வகையில் பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. 2014 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைக்கான தேர்தலில் குஜராத் முதல்வராக இருந்த மோடி நாடு முழுவதும் சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்தார். மோடி வளர்ச்சியின் நாயகனாக காண்பிக்கப்பட்டார். காங்கிரசின் கரையாக ஊழல் பிரதானப்படுதப்பட்டது. மோடி வந்தால் மட்டுமே நாடு சுபிட்சம் பெறும் என்ற கருத்து பிரச்சார கூட்டங்கள் வாயிலாகவும் சமூக வலைதங்கள் மூலமாகவும் படு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது

மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!! மத்திய சென்னையில் கமீலா நாசர்?.. நேர்காணலே முடியலையே.. அதுக்குள்ள போஸ்டர் ரெடியாய்ருச்சே!!

இந்த பிரச்சாரங்களுக்கு பின்னணியில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளாரான பிரசாந்த் கிஷோர் இருந்தார். இவர் பிரபல கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் ஆகிய கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களோடு இணைந்து தேர்தல் வியூகம் வகுப்பதில் கில்லாடி. கடந்த தேர்தலில் இவர் மோடிக்காக ஹர் ஹர் மோடி, கர் கர் மோடி என்ற பிரச்சார கோஷத்தை வடிவமைத்து கொடுத்தார் இது தேர்தலில் பெரும்பங்கு வகித்தது.

 Modi to hold 200 campaign meetings for LS polls

இது போன்ற பல்வேறு திட்டங்களோடு இப்போதும் மோடி களமிறங்க உள்ளார். மோடி மட்டும் 200 கூட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களையும் வாக்குறுதிகளையும் முன்வைக்க உள்ளார். இது தவிர பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத்சிங், யோகி ஆதித்யநாத், ஸ்மிரிதி இரானி, பியுஸ் கோயல், நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல்வேறு தலைவர்களையும் பாஜக களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

இந்த தலைவர்கள் மற்றும் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆகியோர் பங்கு பெறும் வகையில் மொத்தம் 1000 பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சார கூட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி சாதிக்காத விசயங்களை பட்டியலிட்டு கடந்த 5 வருடத்தில் பாஜக சாதித்த விசயங்களை முன் வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

English summary
BJP has planned to have 200 campaign meetings for PM Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X