அமலாக்கத்துறைக்கு சூப்பர் பவர்.. இனி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கையும் விசாரிக்கும்.. மத்திய அரசு அதிரடி!
டெல்லி: ஜிஎஸ்டி மோசடி தொடர்பான வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. ஜிஎஸ்டியின் முழு அமைப்பை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு.
சட்டவிராத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றுடன் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க்கை மத்திய அரசு இணைத்துள்ளது.

ஜிஎஸ்டி நெட்வொர்க் அரசியலமைப்புச் சட்டத்தின் 66வது பிரிவில் உள்ள பட்டியலில் 26வது அமைப்பாகச் சேர்க்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு ஆகிய விசாரணை அமைப்புகளின் விசாரணைக்கு தகவல் தேவைப்பட்டால், ஜிஎஸ்டி நெட்வொர்க் அந்தத் தகவல்களை அவர்களிடம் அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி தாக்கல் செய்பவர் ஏதேனும் சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர் பற்றிய தகவல்களை ஜிஎஸ்டி நெட்வொர்க் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவுடன் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம், அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கு ஜிஎஸ்டி குறித்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உண்டு.
இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்களை அதிகாரிகள் பரிசோதித்ததில் அவற்றில் 25% போலியானது என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து போலியான ஜிஎஸ்டி பதிவு தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டியின் முழு அமைப்பையும் மத்திய அரசு கொண்டு வந்ததால் இனி ஜிஎஸ்டி மோசடி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications