என் தந்தை ஹீரோ...என் பெஸ்ட் பிரண்ட் - எல்.எஸ்.லிடரின் மகள் உருக்கம்
தந்தையின் மறைவு நாட்டுகான இழப்பு என்று கூறிய எல்.எஸ்.லிடரின் மகள், தனது தந்தையின் நினைவுகளுடன் இனி பயணிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி: என் தந்தையின் மறைவு நாட்டுக்கான இழப்பு. அவர் எனது ஹீரோ என்று எல்.எஸ்.லிடரின் 17 வயது மகள் ஆஷ்னா கூறியுள்ளார். என் தந்தை இதுவரை என்னுடன் இருந்த நினைவுகளுடன் பயணிப்பேன். இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் சிங், சாத்பால், சவுஹான், குல்தீப், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், தாஸ் , சாய் தேஜா ஆகிய 13 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தின் குரூப் கேப்டன் வரும் சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு தற்போது பெங்களூருவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிர் நீர்த்த 13 பேரது உடல்களுக்கும் நேற்று தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனி விமானம் மூலம் உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பிபின் ராவத் மற்றும் வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி கண்டோன்மெண்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் ராணுவ விரர் எல்.எஸ் லிடருக்கு, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடனும், குடும்ப முறைப்படியும் இறுதிச் சடங்கு நடைபெற்றது. லிடரின் உடலுக்கு அவரது மனைவி கீதிகாவும், 17 வயது மகள் ஆஷ்னாவும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆஷ்னா, தன் தந்தை தனக்கு ஹீரோ என்றும், தனக்கு பெஸ்ட் ஃபிரண்ட் என்றும் கூறினார். தந்தையின் மறைவு நாட்டுகான இழப்பு என்று கூறினார். மேலும் தந்தையின் நினைவுகளுடன் இனி பயணிப்பேன் என்று கூறிய ஆஷ்னா.. இனி வரும் காலங்களில் நல்லது நடக்கும் என எதிர்ப்பார்ப்பபதாக தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உண்மையை கண்டறியும்வரை யூகம் செய்யாதீர்கள். விரிவான விசாரணை நடத்தி விரைவாக உண்மைகள் வெளியிடப்படும். இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும்வகையில் யூகங்களை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications