"பயப்படவில்லை, கவனமாக இருக்கேன்" கைக்குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு டெம்ஜென் இம்னா ட்வீட்!
டெல்லி: பயப்படவில்லை.. நான் கவனமாக இருக்கிறேன் என்று கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா. தற்போது இந்த புகைப்படம் ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது.
நாகலாந்தில் ஆளும் பாஜகவை சேர்ந்தவர் டெம்ஜென் இம்னா அலாங்.
வடகிழக்கு மாநில மக்களின் முக அமைப்பு கொண்ட டெம்ஜென் இம்னா சற்று குண்டாகவும் சிறிய கண்கள் கொண்டவராகவும் இருப்பார். இதனால் டெம்ஜென் இம்னா நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இவருடைய ஒவ்வொரு பதிவும்..
இணையத்தில் ரசிக்க வைக்கும் வகையில் ஜாலியாக பதிவு போடுவதை வாடிக்கையாக டெம்ஜென் இம்னா கொண்டு இருக்கிறார். இதனால், அவருடைய ஒவ்வொரு பதிவும் இணையத்தில் வேகமாக பரவும். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ''நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள், பிரபலத்தை போல உணர்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார். இந்த ட்விட் பதிவுகள் நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

கைக்குழந்தை ஒன்றை கையில் வைத்தபடி
அதேபோல், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த என்னைப் போலவே சிங்கிளாக இருங்கள் என்றும் டெம்ஜென் இம்னா பதிவிட்டு கலாய்த்து இருந்தார். அவரது பதிவுகளை உடனடியாக பகிர்ந்து அதற்கு கருத்துக்களையும் பதிவிட்டு டிரெண்ட் ஆக்கி விடுவர். அந்த வகையில், டெம்ஜென் இம்னா அலாங், தனது ட்விட்டரில் போட்டிருக்கும் ஒரு பதிவுதான் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கைக்குழந்தை ஒன்றை கையில் ஏந்தியபடி டெம்ஜென் இம்னா அலாங் நின்று கொண்டிருக்கிறார்.

கவனமாகவே இருக்கிறேன்
எப்போதும் சிரித்த முகத்துடன் பதிவுகளை போடும் டெம்ஜென் இம்னா அலாங் இதில் கொஞ்சம் பதற்றமாக காணப்பட்டார். அதோடு, தனது ட்விட் பதிவில் பயப்படவில்லை.. கவனமாகவே இருக்கிறேன். ஏனென்றால் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எனது சூழலை பார்த்து குழந்தையின் தந்தை சிரித்துக் கொண்டு இருக்கிறார்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து
நாகலாந்து அமைச்சரின் இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளை வாரிக்குவித்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த படம் அருமையாக உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் இன்னொரு நெட்டிசன் கூறுகையில், ட்விட்டரில் அதிகம் ரசிக்கப்படும் நபர் நீங்கள் தான் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று பதிவிட்டு இருக்கிறார்.

இப்படித்தான் உணர்ந்தேன்
எனது மருமகளை நான் முதலில் எடுக்கும் போது இப்படித்தான் உணர்ந்தேன் என்று இன்னொரு நெட்டிசன் பதிவிட்டு இருக்கிறார். நாகாலந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங் கையில் வைத்திருந்த குழந்தை பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினர் அரவிந்த் தமனியின் குழந்தையாகும்.

நகைச்சுவை பாணியில் பதிலடி
தன்னைப்பற்றிய உருவக்கேலிக்கு சற்றும் சளைக்காத டெம்ஜென் இம்னா, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறார். நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது ட்விட்டகள் இணையத்தில் பிரபலம் அடைந்துவிட்டார் டெம்ஜென்இம்னா,
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications