உன் வோட்டே வேணாம்.. நானே சொல்லிகிட்டேன் நான் அதிபர்னு.. அத ஒரு 4 நாடு ஏத்துக்கிச்சு.. நித்தியானந்தா
டெல்லி: உன் காசும் வேண்டாம், உன் ஓட்டும் வேண்டாம். நானே சொல்லிகிட்டேன் நான் அதிபர்னு, அத ஒரு 4 நாடு ஏற்றுக் கொண்டது. அதற்கு நான் என்ன செய்வது? என நித்தியானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
நித்தியானந்தா கைலாசா நாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். அந்த நாட்டிற்கு அவர் அதிபர் என்றும் சொல்கிறார். மேலும் பாஸ்போர்ட், கொடி, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டதாகவும் சொல்கிறார்.
கர்நாடகாவில் ஒரு வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தினந்தோறும் மக்களுக்கு வீடியோவில் தோன்றி அருளாசி வழங்கி வருகிறார். அவ்வப்போது ஏதாவது வில்லங்கமாகவும் பேசுவார்.

நித்தியானந்தா
அந்த வகையில் அவர் ஒரு வீடியோவில் பாஸ்போர்ட் குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. இதுகுறித்து நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில் கூறுகையில் உன் காசும் வேணாம், துட்டும் வேணாம். உன்னை பொய் சொல்லி ஏமாத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லையப்பா. பிரபஞ்ச சத்தியங்களை உள்ளது உள்ளபடியே சொல்வேன்.

ஓட்டு
நீ துட்டு கொடுத்து நான் பணக்காரன் ஆக வேண்டியதில்லை. நீ ஓட்ட போட்டு நான் அதிபராக போவதில்லை. நானே சொல்லிகிட்டேன் நான் அதிபர்னு. இதை ஒரு 4 நாடுகள் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு நான் என்ன செய்வது? பாஸ்போர்ட்டை கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாங்க. சட்டவிரோதமாக பறித்துக் கொண்டார்கள். சரி நானே ஒன்னுதுக்கு பாஸ்போர்ட்டுனு போட்டுட்டு கையெழுத்து போட்டு வச்சிக்கிட்டேன்.

பாஸ்போர்ட்
இதை ஒரு 4 நாடுகள் ஒப்புக் கொண்டார்கள். சரி சாமி! இதான் உங்க பாஸ்போர்ட்டுனு நாங்கள் ஒத்துகிறோம். வாங்கன்னு சொல்லிட்டாங்க. நான் என்ன செய்யறது அவ்வளவுதான்! கன்சல்டன்சிக்காக எனது நேரத்தை ஒதுக்க தயாராக இருந்தால் கண்டிப்பாக பில்லியன் டாலர்கள் கம்பெனிகள் என்னை சந்தோஷமாக ஏற்று எனது ஆலோசனைகளை கேட்பார்கள். ஆனால் நான் அதை செய்ய போவதில்லை. நான் எல்லாவற்றையும் உங்களுக்காக இலவசமாகவே தருகிறேன்.

ஒரு இளைஞர்
காதல்தான் எல்லாவற்றுக்கு காரணம். ஒரு இளைஞர் ஒரு பெண் மீது அன்பு கொள்வதும் உடல் மீதான ஆசையில் அன்பு கொள்வதும் தன் பிள்ளையின் மீது அன்பு கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. நான் அனைவர் மீதும் பிள்ளைகள் மீது கொண்டுள்ள அன்பை வைத்துள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications