செம.. இனி டோல்கேட்டில் நிற்கவே வேண்டாம்.. அதுமட்டுமா.. பயணத்தின்போதே சார்ஜ் ஏற்ற எலெக்ட்ரிக் சாலைகள்
டெல்லி: சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் நிற்பதை தவிர்க்க தானியங்கி முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தோ - அமெரிக்க வர்த்தக சபையின் 19 வது பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய நிதின் கட்கரி, இந்தியாவில் சாலை போக்குவரத்தை மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறினார்.

நிதின் கட்கரி பேச்சு
"இந்தியாவில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்திட வேண்டும். சாலை போக்குவரத்தை மின் மயமாக்க விரும்புகிறோம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய சாலைகளில் மையங்களை அமைக்க வேண்டும்.

மின்சார நெடுஞ்சாலை
இதற்காக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மத்திய அரசு நாடு முழுவதும் மின்சார நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் கனரக வாகனங்கள் ஓடும்போதே சார்ஜ் செய்துகொள்ளலாம்.

சுங்கச்சாவடிகள்
இதேபோல் சுங்கச் சாவடிகளையும் சூரிய ஒளி சக்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாக இயக்குவதை அரசு ஊக்குவிக்கிறது. நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்த அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தானியங்கி முறை
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நின்று செல்வதை தவிர்க்க வாகனங்கள் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்ய அதிநவீன கேரமாக்கள் பொறுத்தப்படும். அந்த தொழில்நுட்பத்தின் மூலமாக தானியங்கி முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலமாக ஃபாஸ்ட் டேக் முறையின் தேவை இருக்காது.

போக்குவரத்து நெரிசல்
சுங்கச்சாவடிகளில் மட்டும் சராசரியாக 8 நிமிடங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. ஃபாஸ்ட் டேக் வந்தபிறகு இது 47 வினாடிகளாக குறைந்தது. இதை மேலும் குறைப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது. இந்த திட்டம் சாதகமானால் காத்திருப்பு நேரம் குறைவது மட்டுமல்லாமல் போக்குவடத்து நெரிசலும் குறையும்." என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications