அளவுக்கு மீறி வீட்டில் பணமிருந்தல் ஆப்பு! புதிய ஐடி சட்டத்தால் மக்கள் பீதி! மத்திய அரசின் விளக்கம்!
டெல்லி: சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக, புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வருவதால் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் வீட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்கப் பணம் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ஒரு தகவல் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், அந்த தகவல் முழுக்க முழுக்க தவறானது என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ (PIB) இந்த வதந்திகளை மறுத்து விளக்கம் வெளியிட்டுள்ளது.
புதிய வருமான வரிச் சட்டம் - 2025 என்ற பெயரில், 2026 ஏப்ரல் முதல் வீட்டில் பணம் வைப்பதற்கே உச்ச வரம்பு விதிக்கப்படும், அதற்கு மேல் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும், ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் வரி வசூலிப்பார்கள் என்றெல்லாம் பல வீடியோக்கள், ஆடியோ பதிவுகள், சமூக வலைதள பதிவுகள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தன.
ஆனால், இந்த தகவலை, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ மறுத்துள்ளது. 1961ம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்துவதே புதிய சட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு கூறியுள்ளது.

வீட்டில் அதிக பணம்
அதாவது, சட்டத்தில் உள்ள வழிகள், கட்டுப்பாடுகளை, விதிகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றுவது மட்டுமே புதிய வருமான வரிச் சட்டத்தின் குறிக்கோள் எனவும், ரொக்கப் பணம் வைத்திருப்பது அல்லது பரிவர்த்தனை செய்வது தொடர்பாக புதிய வரம்போ, அபராத விதியோ எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும் PIB விளக்கம் அளித்துள்ளது.
புதிய வருமானவரி சட்டம்
அதே நேரத்தில், வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்பதையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் அதை வைத்திருப்பதற்கு உங்கள் வருமானம் சட்டப்படி வெளிப்படையாக இருக்க வேண்டும். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை நிரூபிக்கும் ஆவணங்களும், வருமான வரி கணக்கில் (ITR) அந்தத் தொகை தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு.
மத்திய அரசு விளக்கம்
மேலும், வங்கியில் ரொக்கமாக பெரிய அளவில் பணம் செலுத்தும் அல்லது எடுக்கும் போது PAN மற்றும் ஆதார் தகவல்கள் தேவைப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் முன்பே தெரிவித்துள்ளது. ஒரே நாளில் ரூ.50,000 க்கும் மேல் ரொக்கம் செலுத்தினாலோ அல்லது ஒரு ஆண்டில் ரூ.20 லட்சத்துக்கும் மேல் ரொக்கம் செலுத்தினாலோ, பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயம். இவை வங்கியில் நடக்கும் பரிவர்த்தனைக்கு மட்டும் பொருந்தும் விதிகள்.
பிஐபி தகவல்
அதனால், "வீட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால் அபராதம்" என்ற தகவல் வெறும் வதந்தி மட்டுமே. பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை நம்பி பீதியடைய வேண்டாம் என்றும், உண்மையான தகவல்களை அறிய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையே பார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மொத்தத்தில், சட்டப்படி வரி செலுத்தி வரும் மக்கள் வீட்டில் பணம் வைத்திருப்பதில் எந்த தடையும் இல்லை. ஆனால் அந்தப் பணத்தின் ஆதாரம் தெளிவாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை முதல் வருமான வரி மாற்றம் வருகிறதா? மாத சம்பளம் வாங்குவோருக்கு புதிதாக என்னென்ன சலுகைகள்? -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications