24 மணி நேரம்தான்! நாடு முழுக்க டெலிவரி! சொமாட்டோ அறிமுகப்படுத்தும் புதிய முறை.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் சிறப்பு வாய்ந்த உணவுகளை நாடு முழுவதும் டெலிவெரி செய்யும் விதமாக புதிய திட்டத்தை உணவு விநியோக நிறுவனமான ' ' தொடங்க இருக்கிறது.

இதற்கான மாதிரி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால். இந்தியாவின் மிகச்சிறந்த மாநில உணவுகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு விநியோகிக்கப்படும்.

No more going to Mysore to buy Mysorebagu; A new methodology introduced by zomato

இந்தியா என்பது பல்வேறு கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய நாடு. உண்மையில் இது நாடு என சொல்வதைவிடவும் பல மாநிலங்களின் ஒன்றியம் என்று கூட சொல்லாம். எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு உணவு வகைகள் உண்டு. இது அந்த மாநில மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். ஹைதராபாத் நகரத்திற்கு பிரியாணி, கொல்கத்தாவுக்கு ரசகுல்லா போன்றவை புகழ்பெற்ற உணவு முறையாகும்.

இந்நிலையில் இந்த உணவுகளை இந்தியா முழுவதும் இனி டெலிவரி செய்ய சொமாட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர் குருகிராம் மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சோதனை முறையில் இந்த உணவுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் நாடு முழுவதும் இது விரிவாக்கப்படும். அதாவது நீங்கள் சென்னையில் இருந்துகொண்டே கொல்கத்தாவின் ரகுல்லாவை ஆர்டர் செய்ய முடியும்.

இதற்காக இந்தியாவின் 100 விமான நிலையங்கள் பயன்படுத்தப்படும். அதற்கேற்றார் போல் உணவு பாதுகாப்பான முறையில் கையாளப்படும். குளிர்ச்சியான பொருள் எனில் அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கொள்கலன்களில் உணவு தயாரிக்கும் இடங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும். இந்த திட்டம் உண்மையில் உணவு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சிறப்பான திட்டமாகும். இந்த திட்டத்திற்கு 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ல் தொடங்கப்பட்ட இந்த சொமாட்டோ உணவு விநியோக நிறுவனம் இந்தியாவின் முதன்மை உணவு விநியோக நிறுவனமாக உள்ளது. தற்போது குருக்கிராமின் இதன் தலைமையகம் இருக்கிறது. நிறுவனம் உருவாக்கப்பட்ட 14 ஆண்டுகளில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்திருக்கிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு விநியோகத்தில் குறிப்பிடத்தக்க பணியை இம்மாதிரியான உணவு விநியோக நிறுவனங்கள் செய்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+