ஆண்கள், பெண்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை: மத்திய அரசு
டெல்லி: ஆண்கள், பெண்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கும், கொவிட்-19 தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட்-19 தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஊடக செய்திகள் வெளியிட்டிருப்பதோடு, இந்தத் தடுப்பூசிகளை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள எந்தத் தடுப்பூசிகளும் ஆண்கள் அல்லது பெண்களிடையே மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது; பக்க விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அனைத்துத் தடுப்பூசிகளும், முதலில் விலங்குகளிடமும், அதைத்தொடர்ந்து மனிதர்களிடமும் சோதனை செய்யப்படுகிறது.
தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், கொவிட்-19 தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற தவறான கருத்தைத் தடுப்பதற்காக, இது போன்ற கருத்துகளுக்கு எந்த விதமான அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்று ஏற்கனவே தெளிவும் படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி, பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் வாய்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. கொவிட்- 19 தடுப்புமருந்து வழங்கலுக்கான தேசிய நிபுணர்குழு, பாலூட்டும் தாய்மார்கள் அனைவருக்கும் இந்த தடுப்பூசியை பரிந்துரைத்துள்ளதோடு, இது முற்றிலும் பாதுகாப்பானது.
தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ பாலூட்டுவதை நிறுத்த வேண்டாம் இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications