டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆயுஷ் கூட்டம்...இந்தி தெரியாத மருத்துவர்கள்...கலந்து கொள்ள வேண்டாம்...செயலாளர் அதிரடி!!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்தி தெரியாதவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று அந்த அமைச்சகத்தின் செயலாளர் கூறி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்களால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

Recommended Video

    ஆயுஷ் கூட்டம்...இந்தி தெரியாத மருத்துவர்கள்...கலந்து கொள்ள வேண்டாம்...செயலாளர் அதிரடி!!

    டெல்லியில் கடந்த 3 நாட்களாக ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயுர்வேத மற்றும் யோகா மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் பயிற்சி எடுத்துள்ளார்.

    Non Hindi speaking Ayush doctors asked to leave the meeting

    அப்போது இவர் இந்தியில் பேசியுள்ளார். தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட மருத்துவர் ஒருவர் இந்தியில் பேசினால் எங்களுக்கு புரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அந்த செயலாளர் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. உங்களுக்கு இந்தி தெரியாவிட்டால், கூட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளவும் என்று தெரிவித்ததாக தகவல்களும், வீடியோவும் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி தெரிந்த மாநிலங்களில் இருந்து கலந்து கொண்ட பல மருத்துவர்களும் இந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அப்போதும் கேட்காத செயலாளர் விடாப்பிடியாக அவர்களை வெளியேறுமாறு கூறியுள்ளார். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் இருந்துதான் மருத்துவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    "நல்லகண்ணுவுக்கு கொரோனா இல்லை.. எஸ்பிபி தொடர்ந்து கவலைக்கிடம்".. விஜயபாஸ்கர் தகவல்

    சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழியிடம் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் இந்தியில் பேசினார். அதற்கு தனக்கு இந்தி தெரியாது என்றும் ஆங்கிலத்தில் பேசுமாறும் கனிமொழி வலியுறுத்தினார். அதற்கு அந்த பெண் காவலர், ''நீங்கள் எல்லாம் இந்தியரா?" என்று கேள்வி எழுப்பி இருந்ததாக கனிமொழி தனது டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு தேசிய அளவில் பெரிய எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதற்குள் இந்த சர்ச்சையும் சேர்ந்து கொண்டுள்ளது.

    English summary
    Non Hindi speaking Ayush doctors asked to leave the meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X