Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திறந்த வெளியில் தொழுகையா.. முடியவே முடியாது... ஹரியானா முதல்வர் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா மாநிலம் குர்கானில் இஸ்லாமியர்கள் திறந்தவெளியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தக் கூடாது என்று அம்மாநில முதல்வர் எம்.எல்.கட்டார் தெரிவித்துள்ளார்.

குர்கான் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், யாருடைய உரிமைகளையும் பறிக்காத வண்ணம் ஒரு "சமூக முடிவு" எட்டப்படும் எனவும அவர் தெரிவித்தார்.

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும்போது மீண்டும் இரு இரு சமூகங்களுக்கிடையில் பிரச்சனை வருவதை அடுத்து முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொது இடங்களில் தொழுகை

பொது இடங்களில் தொழுகை

ஹரியானா மாநிலம் குர்கானில் சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் தொழுகை நடந்திருக்கும்போது மற்றொரு சமூகத்தினர் அவர்கள் மீது மாட்டு சாணத்தை வீசும் அளவுக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும்போது "ஜெய் ஸ்ரீ ராம்" என்று மற்றொரு தரப்பினர் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த அக்டோபர் மாதம் தொழுகை நடத்திக்கொண்டிருக்கும்போது பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரார்த்தனை செய்ய எல்லோருக்கும் உரிமை

பிரார்த்தனை செய்ய எல்லோருக்கும் உரிமை

இந்த போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஹரியானா முதலமைச்சர் எம்.எல். கட்டார் தொழுகை நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்றும் அதே சமயம் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து தொழுகை நடைபெறும் 37 இடங்களில் 8 இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக் கூடாது என நவம்பர் 2ம் தேதி மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது. பின்னர் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த இடங்கள் மீண்டும் பிரார்த்தனைக்கு அனுமதி தந்தது. ஆனால் மீண்டும் பிரச்சனை வெடித்தால் தொழுகைக்கு அந்த இடங்களில் தடை விதிப்பதை தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளது.

ஹரியானா முதல்வர் திட்டவட்டம்

ஹரியானா முதல்வர் திட்டவட்டம்

ஹரியானா மாநில முதலமைச்சர் எம்.எல்.கட்டார் மறு உத்தரவு வரும்வரை குர்கானில் பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதுவரை, மக்கள் தங்கள் வீடுகளிலும் பிற வழிபாட்டுத் தலங்களிலும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என தெரிவித்த முதலமைச்சர் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித் ஹரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டார், வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்வதில் அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

தொழுகை பிரச்சனைக்கு தீர்வு

தொழுகை பிரச்சனைக்கு தீர்வு

மேலும் வழிபாட்டுத் தலங்கள் பிரார்த்தனை செய்வதற்காகத்தான் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் மேலும் தொழுகை தொடர்பாக இருசமூகத்தினரிடையே அடிக்கடி ஏற்படும் சண்டை தொடர்பாக காவல்துறையிடம் பேசியுள்ளதாகவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் எம்.எல்.கட்டார் கூறினார். எனவே தற்போதைய சூழ்நிலையில் திறந்த வெளியில் தொழுகை நடத்துவதை தற்போது அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக எம்.எல்.கட்டார் கூறியுள்ளார். மேலும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான பகுதிகள் மற்றும் இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதை மீட்பதற்கான உதவிகளை அரசு செய்யும் என்றும் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+