அக்னிபாத்.. 7.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்தது பெருமையல்ல.. வேலையில்லா திண்டாட்ட கொடுமை: ப.சிதம்பரம்
டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேருவதற்கு 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பது பெருமைக்குரியது அல்ல; வேலைவாய்ப்பின்மை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
Recommended Video
அக்னிபாத் எனும் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதன்படி ராணுவப் பணி காலம் 4 ஆண்டுகள் என குறைக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. வட இந்தியாவே பற்றி எரியும் அளவுக்கு போராட்டங்கள் வெடித்தன.

வட இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டன; ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன; பல நூறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.ஆனாலும் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நாட்டின் விமானப் படையில் 3000 காலி பணியிடங்களுக்கு அக்னிபாத் திட்டத்தின் கீழ் 7,50,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இதன் மூலம் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் எனவும் மத்திய அரசு கூறியது.

ஆனால், இது பெருமைப்படக் கூடிய விஷயம் அல்ல. நாட்டின் வேலைவாய்ப்பின்மை மிக மோசமான உச்சநிலையில் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்தக் கூடியது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று விமர்சித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
