'காஷ்மீரை விடுவிக்க வேண்டும்..' அல்கொய்தாவின் அறிக்கைக்கு பின்னணியில் பாகிஸ்தான்!வெளியான பகீர் தகவல்
டெல்லி: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதற்கு வாழ்த்து தெரிவித்த அறிக்கை வெளியிட்டிருந்த அல்கொய்தா, காஷ்மீர் உள்ளிட்ட முஸ்லிம் நிலங்களும் விடுதலை பெற வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், அல்கொய்தாவின் இந்த அறிக்கைக்குப் பின் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்த போர் தற்போது தான் முடிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிவிட்டனர். இதனைத் தாலிபான்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
அதேநேரம் ஆப்கனில் தாலிபான்கள் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை. தாலிபான்கள் தலைமையிலான புதிய அரசு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாலிபான் ஆட்சி
கடந்த 1996- 2001 வரையிலான தாலிபான்கள் ஆட்சி எப்படி இருந்தது என்பதைப் பார்த்த உலக நாடுகள் தாலிபான்கள் அங்கீகரிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன. பாகிஸ்தான், சீனா பனற ஒரு சில நாடுகள் மட்டுமே தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், தாலிபான்களைப் பாராட்டி அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அல்கொய்தா அறிக்கை
அந்த அறிக்கையில் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்; அல்லாவின் கருணையால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றி பெற்றுள்ளனர் எனக் கூறப்பட்டிருந்தது மேலும் பாலஸ்தீனம், காஷ்மீர், சோமாலியா, ஏமன் என முஸ்லிம் நிலங்கள் அனைத்தும் இஸ்லாமிய எதிரிகளிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

பின்னணியில் பாகிஸ்தான்
இந்நிலையில் அல்கொய்தாவின் அந்த அறிக்கைக்குப் பின் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாடு கடந்த ஜிகாத் பற்றிய அந்த அறிக்கை கவலைக்குரியது. காஷ்மீர் அதில் இடம்பெற்றுள்ளது புதிரான ஒன்று. ஏனென்றால் இதுவரை தாலிபான்களின் ஒருபோதும் காஷ்மீரை தங்கள் இலக்காக அறிவித்ததில்லை. அல்கொய்தாவின் இந்த அறிக்கையின் பின்னணியில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு உள்ளது.

மனிதக்குலத்திற்கு ஆபத்தானது
இந்த அறிக்கை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகள் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அல்கொய்தாவின் அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம். அல்கொய்தா உலகில் உள்ள இஸ்லாமியர்களை பயங்ரவாதிகளாகக் முயல்கிறது. இது மனிதக்குலத்திற்கு ஆபத்தானது. இதைப் பாகிஸ்தான் முன்னெடுத்துச் செல்கிறது.

சீனா, ரஷ்யா இல்லை
அல்கொய்தாவின் தலைவர் அய்மான் அல் சவாஹிரி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார். அதேபோல தாலிபானின் முக்கிய தளபதியா ஹைபத்துல்லா அகுந்த்ஸடா கூட பாகிஸ்தானின் உளவுத்துறை ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் தான் உள்ளதாகக் கூறப்படுகிறது" என்றார். அல்கொய்தாவின் அறிக்கையில் இஸ்லாமியர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தப்படும் ரஷ்யாவில் செச்சினியா மற்றும் சீனாவின் சின்ஜியாங் பகுதிகளின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நடவடிக்கை
தாலிபான்கள் ஆட்சி கடந்த முறை இருந்ததை போல இருக்காது என்றும் இம்முறை பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் மண்ணில் இடமில்லை என்றும் தாலிபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தாலிபான்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் எனத் தெளிவுபடுத்தியுள்ளன. மேலும், ஆப்கனில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், இந்தியா எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தாலிபான் ஆட்சி
தாலிபான்கள் இதுவரை காஷ்மீர் மீது வெளிப்படையாக ஆர்வம் காட்டியதில்லை. ஆனால், கடந்த தாலிபான் ஆட்சியில் காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்க ஆதரவு தெரிவிக்கும் பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலாம் கொடுத்தது. இது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. இந்த முறை அமெரிக்காவின் பல அதிநவீன ஆயுதங்களும் தாலிபான்கள் வசம் உள்ளன. எனவே, கடந்த முறை போலவே இம்முறையும் நடந்தால் அது இந்தியாவுக்குப் பெரிய தலைவலியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications