பாக்.ராணுவத்தை புகழ்ந்து வீடியோவில் பேச அபிநந்தனுக்கு நெருக்கடி

டெல்லி: இந்திய அதிகாரிகளிடம் விங் கமாண்டர் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்பாக, பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவருக்கு டீ கொடுத்து உபசரித்ததோடு, வீடியோ ஒன்றை எடுத்துள்ளனர்.
விங் கமாண்டர் அபிநந்தன் லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு இரவு 9.20 மணியளவில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா வந்த பிறகும் அபிநந்தன் முகத்தை கூட காட்டாத அதிகாரிகள்
இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்பாக, அவரை அழைத்து வந்த பாகிஸ்தான் ரேஞ்சர்கள், டீ கொடுத்து உபசரித்தனர். இதன்பிறகு, அபிநந்தனிடம், அவர்கள் செஃல்பி புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுமாறு அபிநந்தனுக்கு தொல்லை கொடுத்து வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளனர்.
அபிநந்தன் வேறு வழியின்றி, பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறப்பாக பார்த்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாரசூட்டிலிருந்து அபிநந்தன் கீழே குதித்தபோது, அவருடன், சர்வீஸ் பிஸ்டலும் வைத்திருந்தார். இவை அனைத்தையும், அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவம் திரும்ப வழங்கியுள்ளது. ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, இவ்வாறு ஆயுதங்களை திரும்ப ஒப்படைப்பு நடைமுறையாகும். ரேஞ்சர்கள் திரும்ப ஒப்படைத்த தனது உடமைகள் அனைத்தையும், அபிநந்தன் சோதனை செய்து பார்த்துக் கொண்டு, நாடு திரும்பினார்.