டச் பண்ணக்கூடாது.. பள்ளியில் "உறவை" தடுக்க நிர்வாகம் போட்ட உத்தரவு.. டென்ஷனான பெற்றோர்! ஏன் தெரியுமா
டெல்லி: பள்ளி மாணவர்களுக்கு இடையே ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு.. இதனிடையே பிரிட்டன் பள்ளி ஒன்று ஒழுக்கத்தை உறுதி செய்ய எடுத்துள்ள நடவடிக்கை சர்ச்சையைக் கிளப்புவதாக அமைந்துள்ளது.
வளரிளம் பருவத்தில் பொதுவாக மாற்றுப் பாலினத்தவர் மீது இயல்பாகவே ஒருவித உணர்வு ஏற்படும். பொதுவாக வெளிநாடுகளில் இந்த வயதில் இந்த உணர்வு ஏற்படுவது இயல்பு தான் என்று உணர்ந்தே இருப்பார்கள்.
இதனால் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விஷயங்களை மட்டும் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். ஆனால், நமது நாட்டில் மட்டுமே படிக்கும் வயசுல உனக்கு என்ன லவ் கேட்குதா என்றெல்லாம் கேட்டு ஆபாசமாகக் கூட திட்டுவார்கள்

பிரிட்டன் பள்ளி
இதனால் குழந்தைகளை மனதளவிலும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிடுவார்கள். தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் மாணவர்களும் மாணவிகளுமே பேசக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது இதே விஷயத்தை வளர்ந்த நாடுகளில் ஒன்றான பிரிட்டனிலும் ஒரு பள்ளி அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி, மாணவர்கள் உறவில் ஈடுபடுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக அனைத்து வகையான உடல் ரீதியான தொடர்புகளையும் தடை செய்து அந்த பிரிட்டன் பள்ளி உத்தரவிட்டுள்ளது. இதற்கு அங்குப் பெற்றோர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கடிதம்
பிரிட்டனின் செம்ஸ்ஃபோர்ட் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்கவோ, கைகளைப் பிடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் கைகளைக் குலுக்கக் கூட அனுமதி இல்லை என்று அவர்கள் அறிவித்துள்ளனர். மாணவர்களுக்கு இடையே அனைத்து விதமான உடல் ரீதியான தொடர்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகப் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு முதலில் கடிதம் எழுதிய நிலையில், அதன் பின்னரே அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கட்டிப் பிடிக்கக் கூடாது
இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், மாணவர்கள் கட்டிப் பிடிக்கவும் கைகளைக் குலுக்கவும் தடை விதிக்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. பெற்றோருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், "உங்கள் குழந்தை பாதுகாப்பாக வைத்திருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கிறோம். உங்கள் குழந்தை மற்ற மாணவர்களைத் தொட்டால், அவர்கள் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ எதுவும் நடக்கலாம். இதனால் காயங்கள் ஏற்படும்.. ஒருவரை மிகவும் சங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளும்.. அல்லது இதையே வாய்ப்பாகப் பயன்படுத்தி சில தாகத முறையிலும் கூட நடந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு முக்கியம்
இதன் காரணமாகவே இந்த உத்தரவை நாங்கள் பிறப்பித்துள்ளோம். அதேபோல மொபைல் பயன்பாட்டிற்கும் கட்டுப்பாட்டை விதிக்கிறோம். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் யாராவது மொபைலை பயன்படுத்தினால்.. அது கைப்பற்றப்பட்டு மாலை வரை திருப்பி அளிக்கப்படாது.. உங்களின் குழந்தைகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதனால் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

கிளம்பிய எதிர்ப்பு
இந்த லெட்டர் வந்ததில் இருந்தே பல பெற்றோர்களும் பள்ளியின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். தங்களிடம் எந்தவொரு ஆலோசனையும் செய்யாமல் இந்த நடவடிக்கையைப் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ளதை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். தகாத முறையில் தொடுவது ஆபத்தானது என்றாலும் கூட இப்படி ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பது சரியானது இல்லை. அவர்கள் ஆரோக்கியமான ரிலேஷன்ஷிப் குறித்தும் குட் டச் பேட் டச் குறித்துச் சொல்லித் தராமல் இப்படியொரு நடவடிக்கை எடுப்பது தவறானது என்று சாடியுள்ளனர்.

தெரியாது
இது குறித்துப் பெற்றோர் ஒருவர் கூறுகையில், "இப்படி ஒட்டுமொத்தமாகத் தடை விதித்தால்.. எது குட் டச்.. எது பேட் டச் என்று கூட குழந்தைகளுக்குத் தெரியாது.. இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கும். மேலும், நண்பர்களுடன் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற தடைகள் தேவையற்றது" என்றார்.. பெற்றோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், இந்தத் திட்டத்தை வாபஸ் வாங்க ஹைலண்ட்ஸ் பள்ளியின் தயாராக இல்லை. மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் இதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications