Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர் அமளி.. அலுவல்கள் நடைபெறாமல் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆளும் கட்சி எம்.பிக்களின் அமளி காரணமாக தற்போது இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அமளி, ஆளும் கட்சியினர் கூட ஏன் போராட்டத்தில் ஈடுபட்டனர் உள்ளிட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை இந்த செய்தி தொகுப்பு முழுமையாக தருகிறது.

கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே மக்களவை செயலகம் சில அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, நாடாளுமன்றத்தில் சகுனி, கொரோனா பரப்புபவர், உளவாளி, சர்வாதிகாரம் உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியிருந்தது. அதேபோல பதாகைகளையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. இது எதிர்க்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்புடன்தான் நாடாளுமன்றம் தொடங்கியது.

 எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் போராட்டம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய நாள் முதல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அக்னிபாத் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி இது குறித்து விவாதிக்க மத்திய அரசை வலியுறுத்தின. மேலும், அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளின் மேல் ஏவப்படுவதாகவும் விமர்சனத்தை முன்வைத்தன. ஆனால் பாஜக எம்.பிக்கள் இது தொடர்பான விவதத்தை முன்னெடுக்கவில்லை. எனவே இது குறித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

 சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

தொடர் அமளி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை பயன்படுத்தியதாக கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உட்பட 4 எம்.பிக்கள் மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், 23 எம்.பிக்களும் ஒரு வாரக்காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிரா சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் 50 மணி நேர தொடர் போராட்டத்தை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே முன்னெடுத்தனர். இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்றது. இதில் திரினாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்களும் பங்கேற்றனர்.

 பாஜக எம்.பிக்கள் அமளி

பாஜக எம்.பிக்கள் அமளி

இது ஒருபுறம் இருக்க, மேற்கு வங்கத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் குடியரசுத் தலைவர் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை மேலெழுந்தது. இந்த சர்ச்சை நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்தது. மக்களவையில் ஸ்மிருதி இரானி, "ஒரு பெண்ணாக காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி தனது கட்சியின் எம்.பி ஒருவர் குடியரசுத் தலைவரை இவ்வாறு பாலியல் ரீதியாக விமர்சிக்க அனுமதித்துள்ளார். எனவே சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். இவரைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தார். இதனால் இரு அவைகளிலும் கடும் அமளி நீடித்தது.

மன்னிப்பு

மன்னிப்பு

எனது

 காங்கிரஸ் போராட்டம்

காங்கிரஸ் போராட்டம்

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரிய பின்னரும் சோனியா காந்தியை சுற்றி வளைத்து மன்னிப்பு கோர சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் 10வது நாளான இன்று பாஜக எம்.பிக்கள் மன்னிப்பு கோர வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினரும், எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஆளுங்கட்சியினரும் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களவையில் பேசிய பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, இந்த விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி மன்னிப்பு கேட்டால் மட்டுமே மக்களவை தொடர்ந்து இயங்கும் என்று கூறினார்.

 மன்னிப்பு கடிதம்

மன்னிப்பு கடிதம்

இந்த சம்பவங்களையடுத்து காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், "நீங்கள் வகிக்கும் பதவியை விவரிக்க தவறான வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாய் தவறி இந்த வார்த்தை வெளிப்பட்டுவிட்டது. இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிக்கவும் வேண்டுகிறேன்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+