டெலிபிராம்ப்டர் இல்லை-பேப்பர் குறிப்புகளுடன் 82 நிமிடம் உணர்ச்சிமிகு உரையாற்றிய பிரதமர் மோடி
டெல்லி: நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி, வழக்கத்துக்கு மாறாக டெலிபிராம்ப்டர் பயன்படுத்தாமல் 82 நிமிடம் பேப்பர் குறிப்புகளுடன் உணர்ச்சிமிகு உரையாற்றினார்.
Recommended Video
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் டெலிபிராம்ப்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். அதில் இடம்பெற்றிருக்கும் உரையை எழுச்சியுடன் பிரதமர் மோடி பேசுவது வழக்கம்.
டெல்லி செங்கோட்டையில் இன்று நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இளைஞர்கள் அடுத்த 25 ஆண்டுகளை தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம். அதுதான் இந்தியாவின் பலம். ஒவ்வொரு இந்தியனுக்கும் எனக்கு ஒரு வேண்டுகோள். அன்றாட வாழ்வில் பெண்களை நோக்கிய மனநிலையை மாற்ற வேண்டும் என்பதே. இந்தியாவின் கனவுகளை நிறைவேற்றுவதில் நாரி சக்தியின் பெருமை முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

மேலும், இந்தியா ஜனநாயகத்தின் தாய். நமது பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவை அசைக்க முடியாத தேசபக்தியின் பொதுவான இழையில் இருந்து வரும் உள்ளார்ந்த பலம் எங்களிடம் உள்ளது என்பதை நமது தேசம் நிரூபித்துள்ளது. ராணி லக்ஷ்மி பாய், ஜல்காரி பாய், துர்கா பாபி, ராணி கைடின்லியு ஆகியோர் இந்தியாவின் பெண் சக்தியின் உண்மையான வலிமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஏகாதிபத்தியத்தின் பல ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ச்சியில் சவால்களை எதிர்கொண்ட போதிலும், இந்திய குடிமக்களின் பிடிவாதம், ஆர்வத்தை எதுவும் தடுக்க முடியாது. சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா கொண்டாடும் வேளையில், நமது ராணுவ வீரர்கள், போலீஸ் படைகள் மற்றும் மிக முக்கியமாக பல சவால்களை எதிர்கொண்டு, புதிய இந்தியாவின் பார்வையை நோக்கி உழைத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வணக்கம் செலுத்த வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். பொதுவாக பொதுக்கூட்ட நிகழ்வுகளில் பிரதமர் மோடி பேசுவதற்கு டெலிபிராம்ப்டர் பயன்படுத்துவது வழக்கம். அதாவது டிவி சேனல்களில் செய்தி வாசிப்பதற்காக அவர்கள் முன்னால் உள்ள திரையில் செய்திகள் வரிசையாக ஓட்டப்படும். அதனை செய்தி வாசிப்பாளர்கள், படித்து தங்களுக்கே உரிய நடையில் வாசிப்பார்கள். அதே நடைமுறைதான் பிரதமர் மோடி நிகழ்ச்சிகளில் பின்பற்றப்பட்டு வந்தது. டெலிபிராம்ப்டர்களில் ஓடுகிற தகவல்களையே பிரதமர் மோடி பார்த்து உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார்.
ஆனால் இம்முறை டெல்லி செங்கோட்டையில் டெலிபிராம்ப்டர் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக பேப்பர் குறிப்புகளை வைத்துக் கொண்டு சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக 82 நிமிடங்கள், பிரதமர் மோடி உணர்வுப் பெருக்குடனான சுதந்திர தின உரையாற்றினார்.