டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்தோரை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்தது -மக்களவையில் பிரதமர் தாக்கு

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்தோரை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ததாகவும், எல்லாப் பிரச்சினைகளையும் அரசாங்கங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

2022- 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இணைந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

தமிழகத்தில் 1967க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவில்லையே! ராகுலுக்கு, லோக்சபாவில் மோடி பதிலடி தமிழகத்தில் 1967க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவில்லையே! ராகுலுக்கு, லோக்சபாவில் மோடி பதிலடி

பிப்ரவரி 1ஆம் தேதி 2020 இரண்டாம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இயற்றப்பட்டது.

காங்கிரஸின் அரசியல்

காங்கிரஸின் அரசியல்

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்தோரை வைத்து அரசியல் செய்தனர் எனவும், புலம் பெயர்ந்த மக்களை வைத்து அரசியர் செய்ததாக காங்கிரஸை குற்றம் சாட்டினார். மேலும் எல்லாப் பிரச்சினைகளையும் அரசாங்கங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை, தேசத்தின் மக்கள் தேசத்தின் இளைஞர்கள் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் எனவும், உதாரணத்திற்கு ஸ்டார்ட் அப் துறையை எடுத்துக் கொள்ளுங்கள், ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது, இது நமது மக்களின் பலத்தை காட்டுகிறது என்றார்.

தேசிய சேவை

தேசிய சேவை

தேசத்தின் பாதுகாப்பு பலமாக உள்ளதாக பேசிய பிரதமர், பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் இருப்பது மிகப்பெரிய தேசிய சேவையாகும் எனவும், நமது இளைஞர்கள், செல்வத்தை உருவாக்குபவர்கள், தொழில்முனைவோரை பயமுறுத்தும் அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, 'மேக் இன் இந்தியா' பற்றிய ஆலோசனைகளை ஒருவர் பெறலாம், மேக் இன் இந்தியா தோல்வியடையும் என்று எந்த மனநிலை கூற முடியும்? எனவும், மேக் இன் இந்தியா என்று கேலி செய்பவர்கள் தாங்களே நகைச்சுவையாக மாறிவிட்டனர் என்றார்.

பிஎம் கதி சக்தி யோஜனா

பிஎம் கதி சக்தி யோஜனா

பிஎம் கதி சக்தி யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சரக்குப்போக்குவரத்து எளிதாக செல்கிறது, போக்குவரத்து உள் கட்டமைப்பு சரியாக ஏற்படுத்தப்பட்டால் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்,
நமது சிறு விவசாயிகளை பலப்படுத்த வேண்டும் எனப் பேசிய பிரதமர், எங்கள் கவனம் சிறு குறு விவசாயிகளின் மீதுதான் உள்ளது எனவும்,சிறு விவசாயிகளின் வலியை அறியாதவர்களுக்கு அவர்களின் பெயரில் அரசியல் செய்ய எந்த தகுதியும் இல்லை எனப் பேசினார்.

சிறு, குறு தொழில் வளர்ச்சி

சிறு, குறு தொழில் வளர்ச்சி

மேலும், சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக பல நடவடிக்கை எடுத்துள்ளோம், ஒன்றரை லட்சம் சிறு குறு தொழில்கள் இந்த திட்டங்களால் வளர்ச்சியடைந்துள்ளன, மக்களோடு மக்களாக இருப்பவர்களுக்கு சிறு குறு தொழிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றி தெரியும் என்ற பிரதமர், பெண்களுக்கு எந்த வித உத்தரவாதமும் இன்றி வங்கிகளில் கடன் அளிக்கப்படுகிறது எனவும், சாலையோர வியாபாரிகளுக்கும் வங்கிகளில் எளிதாக கடன் கிடைக்கிறது என்றார்.

English summary
Prime Minister Narendra Modi has said in the Lok Sabha that the Congress party politicized immigrants during the Corona era and we do not believe that all problems can be solved only by governments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X