ஜம்மு காஷ்மீர் விவகாரம்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்திய மோடி
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு 2019-ல் மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன.

தலைவர்கள் கைது
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமான சட்டசபையை கொண்டதாகும். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஓராண்டுக்கு மேல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2 ஆண்டுகளாக முடக்கம்
இவர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டமும் பாய்ந்தது. பின்னர் அனைவரும் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இதனிடையே ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை மத்திய அரசு நடத்தியது. இருந்தபோதும் இம்மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் 2 ஆண்டுகளாக தொடங்கப்படவில்லை.

டெல்லியில் ஆலோசனை
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். டெல்லியில் இன்று பிற்பகல் சுமார் 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் துவங்கி, 6.30 மணி வரை நடைபெற்றது.

யார் யார் பங்கேற்பு?
இதில் முன்னாள் முதல்வர்களான குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட 14 தலைவர்கள் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அப்படி மாநில அந்தஸ்து வழங்கிய பின்னர் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதும் தலைவர்களின் கோரிக்கை. இந்த பேச்சுவார்த்தைகளில் பல கோரிக்கைகளுக்கு மோடி சம்மதிக்காததால்தான் மீட்டிங் 3 மணி நேரம் நீடித்ததாக கூறப்பட்டது. இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications