டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகிலேயே மிகவும் நீளமான மணாலி - லே சுரங்க நெடுஞ்சாலை நாளை நாட்டுக்கு அர்ப்பணிப்பு!!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே மிகவும் நீளமான 9 கிலோ மீட்டர் தொலைவிலான மணாலி - லே சுரங்க நெடுஞ்சாலையை நாளை காலை 10 மணிக்கு நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். இதற்கு அடல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இமாசலப்பிரதேச மாநிலத்தில் மணாலி - லே இடையிலான 9 கிலோ மீட்டர் தொலைவிலான சுரங்கப்பாதை (நெடுஞ்சாலை)கடந்த பத்தாண்டுகளாக அமைக்கப்பட்டது. அடல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சுரங்கப்பாதை குதிரை ஷூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டைபாதை கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

PM Modi to open worlds longest underground highway tomorrow

இந்த சுரங்கத்தின் மூலம் மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில் 46 கி.மீ., குறைவதுடன், 4 மணி நேர பயண நேரமும் இனி மிச்சமாகும். இந்த சுரங்கப்பாதையின் சிறப்புக்கள் என்னவென்று பார்ப்போம்:

  • 9 கி. மீட்டர் தொலைவில் ரூ. 3,500 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • மணாலி - லே இடையில் ஏழு மணி நேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும்
  • குளிர் காலத்தில் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் இருக்கும் சில பகுதிகளுக்கு செல்ல முடியாது. இனி அந்த சிக்கல் இருக்காது. இந்த சுரங்கப் பாதை போக்குவரத்து மூலம் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக்கின் எந்தப் பகுதிகளுக்கும் செல்லலாம்.
  • இது சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஈர்க்காது. அந்தப் பகுதிகளில் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்.

அத்தியாவசிய சேவையிலுள்ள அரசு ஊழியர்களுக்காக.. சென்னை புறநகர் ரயில் சேவை அக்டோபர் 5ல் துவக்கம் அத்தியாவசிய சேவையிலுள்ள அரசு ஊழியர்களுக்காக.. சென்னை புறநகர் ரயில் சேவை அக்டோபர் 5ல் துவக்கம்

  • மேலும், லஹால்-ஸ்பிட்டி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும்.
  • ஒவ்வொரு 150 கி. மீட்டருக்கும் தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு 60 மீட்டருக்கும் தீயணைப்பு வசதி உள்ளது.
  • ஒவ்வொரு 500 மீட்டருக்கும் எமர்ஜென்சி வெளியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஒரு 2.2 கி. மீட்டருக்கு காற்றின் தரம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 250 மீட்டருக்கும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
  • பயணிகளுக்கு பயண நேரத்தை மட்டுமின்றி, பயணச் செலவையும் சேமிக்கிறது.
  • 14,508 மெட்ரிக் டன் ஸ்டீல், 2,37,596 மெட்ரிக் டன் சிமெண்ட், 14 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • புதிய ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • கடந்தாண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என்று மத்திய அரசு பெயர் வைத்துள்ளது.
  • 2000 ஆம் ஆண்டில் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அந்த ஆண்டில், ஜூன் 3ஆம் தேதி இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.
English summary
PM Modi to open world's longest underground highway tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X