டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன், பீகார் மக்களுக்கு நன்றி: பிரதமர் வாழ்த்து

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்துள்ளதாக பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Bihar-ல் BJP வெற்றி! Modi வெளியிட்ட உருக்கமான Message | Oneindia Tamil

    243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.. இதன் வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலையில் இருந்து தொடங்கியது.. விடிய விடிய நீடித்த வாக்கு எண்ணும் பணியில், இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.

     PM Modi tweeted about Bihar Election Results

    பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களையும் மெகா கூட்டணி 110 இடங்களையும் கைப்பற்றி உள்ளது.

    லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது.. மற்ற கட்சிகள் 7 இடங்களில் வெற்றி பெற்றன.. இதையடுத்து பீகாரில் மறுபடியும் நிதிஷ் குமார் ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.. பல பாஜக தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டும் வருகின்றனர்.

    பாஜகவின் வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்து, வாழ்த்தும் தெரிவித்துள்ளார். "பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியும். தற்போது, பாஜக கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வெற்றிக்கு பாடுபட்ட என்டிஏ கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி" என்று பதிவிட்டிருந்த நிலையில், பீகார் மக்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வாக்களித்துள்ளதாக பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     PM Modi tweeted about Bihar Election Results

    "பீகார் மக்களுக்கு நன்றி. ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது. பாஜக கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றி. பீகாரின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டியுள்ளனர். மக்களின் ஆசீர்வாதத்துடன் பீகாரில் ஜனநாயகம் மறுபடியும் வென்றது.

    பீகார் அனைத்து என்டிஏ தொழிலாளர்களும் அவர்களுடன் பணியாற்றிய உறுதியும் அர்ப்பணிப்பும் பிரமிக்க வைக்கிறது... நான் தொழிலாளர்களை வாழ்த்துகிறேன்.. பீகார் மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக கொள்கிறேன்... கிராம-ஏழைகள், விவசாயி-தொழிலாளர்கள், வணிகர்-கடைக்காரர்கள், பீகாரின் ஒவ்வொரு பகுதியும் என்டிஏவின் 'சப்கா சாத், சபா விகாஸ், சப்கா விஸ்வாஸ்' என்ற மந்திரத்தை நம்பியுள்ளன. ஒவ்வொரு நபரின், ஒவ்வொரு பிராந்தியத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று பீகாரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்.

    பீகாரின் சகோதரிகள் மற்றும் மகள்கள் இந்த முறை சாதனை எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர், இது தன்னிறைவு பெற்ற பீகாரில் தங்கள் பங்கு எவ்வளவு பெரியது என்பதையே வெளிக்காட்டுகிறது. கடந்த வருடங்களில் பீகாரின் தாய் சக்திக்கு புதிய நம்பிக்கையை வழங்க என்டிஏவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் திருப்தி அடைகிறோம்.. இந்த நம்பிக்கை பீகாரை முன்னேற்றுவதில் எங்களுக்கு பலம் தரும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடியே காரணம் என லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். "பிரதமர் மோடி மீதான தங்கள் நம்பிக்கையை பீகார் மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்... பாஜக மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இது பிரதமர்மோடிக்கு கிடைத்த வெற்றி" என கூறியுள்ளார்.

    English summary
    PM Modi tweeted about Bihar Election Results
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X