PM Modi Speech LIVE: 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்- பிரதமர் மோடி அறிவிப்பு- முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

PM Narendra Modi adress the nation on 9 am today - Live updates

Nov 19, 2021, 1:02 pm IST

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதற்கு நடிகர் கார்த்தி வரவேற்பு. உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி- கார்த்தி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்- கார்த்தி ட்வீட்
Nov 19, 2021, 1:02 pm IST

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளதற்கு நடிகர் கார்த்தி வரவேற்பு. உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி- கார்த்தி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்- கார்த்தி ட்வீட்
Nov 19, 2021, 12:09 pm IST

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது சந்தர்ப்பவாத நடவடிக்கை -தமிழக காங்கிரஸ். ராகுல்காந்திக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த மிகப்பெரும் வெற்றி இது -தமிழக காங்கிரஸ்
Nov 19, 2021, 11:57 am IST

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி- அநீதிக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: ராகுல் காந்தி
Nov 19, 2021, 11:39 am IST

தேர்தல் அச்சத்தால் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்ற பிரதமர் மோடி- ப.சிதம்பரம்
Nov 19, 2021, 11:33 am IST

இடைவிடாது போராடும் விவசாயிகள் மன்னரை மண்டியிட வைத்துள்ளனர்- நடிகர் பிரகாஷ் ராஜ்
Nov 19, 2021, 11:33 am IST

விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது- ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்
Nov 19, 2021, 11:31 am IST

விவசாய சட்டங்களை முன்னரே வாபஸ் பெற்றிருக்க வேண்டும்- பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
Nov 19, 2021, 10:59 am IST

உழவர்களின் அறப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி- முதல்வர் மு.க.ஸ்டாலின்
Nov 19, 2021, 10:51 am IST

வாணியம்பாடியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை..! கனமழையால் வாணியம்பாடியில் வெள்ளப்பெருக்கு!
Nov 19, 2021, 9:20 am IST

3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு. நாட்டு மக்களிடையே இன்று உரை நிகழ்த்தியபோது மோடி அறிவிப்பு. வேளாண் சட்டங்களின் நன்மைகளை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியாததால் வாபஸ் என அறிவிப்பு
Nov 19, 2021, 9:14 am IST

விவசாயிகளின் நலனை காக்கதான் 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்- பிரதமர் மோடி உரை. வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகள் நலன் சார்ந்த நிதி ஒதுக்கீடு 5 மடங்கு அதிகரித்துள்ளது- மோடி உரை
Nov 19, 2021, 9:11 am IST

நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் பார்த்திருக்கிறேன்- பிரதமர் மோடி உரை. நம் நாட்டில் 100 விவசாயிகளில் 80 பேர் சிறு விவசாயிகள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலமே அவர்களிடம் உள்ளது: மோடி. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை நான் உணர்ந்துள்ளேன். விவசாயிகளுக்கு சேவை செய்வதே எங்கள் அரசின் நோக்கம்- மோடி உரை
Nov 19, 2021, 9:05 am IST

நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்
Nov 19, 2021, 8:51 am IST

2016ம் ஆண்டு நவம்பர் மாதம், பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது டிவியில் தோன்றி உரையாற்றியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Nov 19, 2021, 8:50 am IST

பிரதமர் இன்று, உத்தரபிரதேச மாநிலத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள நிலையில் முன்னதாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்
Nov 19, 2021, 8:50 am IST

கொரோனா விவகாரம், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி உட்பட எதைப் பற்றி பிரதமர் பேச உள்ளார் என்பது பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+