கொரோனா வேக்சின் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இல்லை.. என்ன காரணம் தெரியுமா? முக்கிய தகவல்
டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் வேக்சின் சான்றிதழில் தற்போது வரை பிரதமர் மோடியின் படம் இடம் பெற்ற நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பல மாதங்களுக்குப் பின்னர் நாட்டில் தினசரி கேஸ்கள் சமீபத்தில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் 3ஆம் அலை உச்சமடையும் என்றும் தினசரி கேஸ்கள் 8 லட்சம் வரை செல்லலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே ஆயுதம்
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட பல்வேறு வேக்சின்களை கொண்டு இந்த தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15- 18 வயதுடைய சிறார்களுக்கு ஏற்கனவே வேக்சின் செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாளை ஜன. 10 முதல் பூஸ்டர் டோஸ் பணிகளும் தொடங்கப்படுகிறது.

வேக்சின் சான்றிதழ்
உலகின் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவில் வேக்சின் செலுத்தியவர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதைக் கோவின் தளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் இருந்து பதிவிறக்கம் ஒருவர் பதிவு செய்துக் கொள்ளாலாம். இந்த கொரோனா காலத்தில் எங்குச் சென்றாலும் வேக்சின் சான்றிதழ் கட்டாயம் என்ற நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வழங்கப்படும் வேக்சின் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

5 மாநில தேர்தல்
இந்தச் சூழலில் தான் உத்தரப் பிரதேசம். பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களில் அடுத்த சில மாதங்களுக்கு வழங்கப்படும் வேக்சின் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகக் கோவின் தளத்திலேயே தேவையான ஃபில்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்முறை இல்லை
வேக்சின் சான்றிதழ்களில் பிரதமரின் புகைப்படம் மறைக்கப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடந்த போதும், எதிர்க்கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம் வேக்சின் சான்றிதழில் பிரதமர் படம் இடம் பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்தே வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் முற்றிலுமாக தோல்வி அடைந்த பிரதமர் மோடி, தனிப்பட்ட விளம்பரத்திற்காகத் தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது,

கேரளா ஐகோர்ட்
இது தொடர்பாகக் கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றம் தொடரப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரருக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, "நமது பிரதமரைப் பார்த்து ஏன் வெட்கப்படுகிறீர்கள். அரசியல் உள்நோக்கத்துடனும், விளம்பர நோக்கத்துடனும் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications