• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அத்தனையும் நடிப்பா கோப்பால்.." காட்டிக் கொடுத்த "கூகுள் ஹிஸ்டரி".. சிக்கிய சைக்கோ அப்தாப்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளியை போலீசார் தேடிய போது ஒன்றும் தெரியாதது போல் இருந்த அப்தாப், கடைசியில் அவரது மொபைலில் இருந்த கூகுள் ஹிஸ்டரியால் மாட்டிக்கொண்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கூகுளில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி கொலைசெய்வது என்பனவற்றை தேடியுள்ளார்.

மும்பையை சேர்ந்த இளம் பெண் ஷ்ரத்தா. தனது காதலன் அப்தாப் அமீனுடன் டெல்லியில் லிவிங் டூகெதர் முறையில் வசித்து வந்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தனது காதலியான ஷ்ரத்தாவை அப்தாப் அமீன் கொடூரமாக கொலை செய்தார்.

எனக்கு ஒரு நியூஸ் கிடைச்சிருக்கு.. கொல்லப்படும் முன்பாக மெசேஜ் செய்த ஷர்த்தா.. வெளியான திடுக் தகவல்!எனக்கு ஒரு நியூஸ் கிடைச்சிருக்கு.. கொல்லப்படும் முன்பாக மெசேஜ் செய்த ஷர்த்தா.. வெளியான திடுக் தகவல்!

காதலி கொலை

காதலி கொலை

கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் வழக்குகளில் ஒன்றாக மாறியது. ஷ்ரத்தாவை கொலை செய்த அவரது ஆண் நண்பர் அப்தாப் அமீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர வைத்து வருகிறது. கொலையை மறைப்பதற்காக அப்தாப் செய்த காரியங்கள் கிரைம் திரில்லர் சினிமாக்களை மிஞ்சும் வகையில் அமைந்து இருந்தது.

 சந்தேகத்தின் பேரில் விசாரணை

சந்தேகத்தின் பேரில் விசாரணை

தற்போது டெல்லி போலீசாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப் அமீனிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றுள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் அப்தாப் முதலில் சிக்கியது சிப்படி என்ற விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. ஷர்த்தவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது தந்தை புகார் அளித்ததும் கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அப்தாப் அமீனை பிடித்து விசாரித்து இருக்கின்றனர்.

ஒன்றும் தெரியாதது போல நாடகம்

ஒன்றும் தெரியாதது போல நாடகம்

அப்போது எந்த சலனமும் இன்றி இயல்பாக இருந்த அப்தாப் அமீன் மீது முதலில் போலீசாருக்கு பெரிதாக சந்தேகம் வரவில்லை. ஆனாலும் ஷ்ரத்தாவின் தந்தை, அப்தாப் அமீன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இது குறித்து போலீசார் கேட்ட போது, கடந்த மே மாதமே ஷ்ர்த்தா வீட்டை விட்டு போய்விட்டார். அவரைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று நாடகம் ஆடியிருக்கிறார். உடனே போலீசார், அப்தாப் செல்போனை வாங்கி சோதனை நடத்தியிருக்கின்றனர்.

 செல்போனை வாங்கி சோதனை

செல்போனை வாங்கி சோதனை

அதில், ஷரத்தாவுடன் சாட்டிங் செய்த விவரங்கள் எதுவும் இல்லை.அனைத்தையும் அழித்து இருந்தார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, அப்தாப் கூகுளில் என்னவெல்லாம் தேடினார் என்று ஆய்வு செய்துள்ளனர். இதில்தான் வழக்கில் திருப்பு முனை ஏற்பட்டு இருக்கிறது. உடலை துண்டு துண்டாக வெட்டுவது எப்படி, தடயங்களை மறைப்பதற்கான ரசாயனம் உள்ளிட்ட விவரங்களை அப்தாப் கூகுளில் தேடியது தெரியவந்து இருக்கிறது.

கூகுள் ஹிஸ்டரியை அழிக்காததால்..

கூகுள் ஹிஸ்டரியை அழிக்காததால்..

இதைப்பற்றி போலீசார் கேட்ட போது, வசமாக சிக்கிக் கொண்டோம் என கருதிய அப்தாப் பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார். இதன்பிறகுதான் போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். அதன்பிறகே ஷரத்தாவை கொலை செய்து உடலை வெட்டி துண்டு துண்டாக வீசியதை அப்தாப் ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஷ்ராத்தாவிடம் செய்த வாட்ஸ் அப் சாட்களை அழித்த அப்தாப் கடைசியில் கூகுள் ஹிஸ்டரியை அழிக்காமல் மாட்டிக்கொண்டுள்ளார்.

டேட்டிங் ஆப் மூலமாக

டேட்டிங் ஆப் மூலமாக

இதற்கிடையே, ஷர்த்தாவை கொலை செய்த பிறகு டேட்டிங் ஆப் மூலமாக அப்தாப் பல பெண்களை சந்தித்தாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக டேட்டிங் ஆப் நிறுவனத்திற்கு தகவல்களை கோரி டெல்லி போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். இந்த விவரங்கள் கிடைத்தால் அப்தாப் பற்றிய மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. அப்தாப் அமீனிடம் நேற்று 3-வது நாளாக உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

English summary
Her boyfriend Abtab Amin, who has been arrested in the case of Shraddha's murder that rocked Delhi, has been caught by the police through Google.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X