டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலக்கரி தட்டுப்பாட்டால் விஸ்வரூபமெடுத்த மின்வெட்டு- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு, இடைவிடாத மின்வெட்டு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

மாநிலங்களில் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பல மாநிலங்களில் மிக மோசமான மின்சார பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கின்றன. மின்சார பற்றாக்குற்ரை தொடருவதால் பெரும்பாலான மாநிலங்களில் பல மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வட இந்திய மாநிலங்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன.

Power Crisis: Amit Shah hold meeting with Union Ministers

இருந்த போதும் போதுமான நிலக்கரி கையிருப்பில் இருக்கிறது என தொடர்ந்து மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களின் நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

English summary
Union Home Minister Amit Shah hold meet on Power Crisis at his residence with Union Ministers RK Singh,Ashwini Vaishnaw and Pralhad Joshi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X