பூஜ்ஜியம்.. ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் ஒரு ஓட்டு கூட பெறாத யஷ்வந்த் சின்ஹா.. தமிழகத்தில் எப்படி?
டெல்லி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா எம்எல்ஏக்களின் ஒரு ஓட்டை கூட பெறவில்லை. இருப்பினும் அவருக்கு அதிகளவில் தமிழகத்தில் ஆதரவு கிடைத்துள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு அடைகிறது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர்.
கடந்த 18 ம் தேதி நாடு முழுவதும் ஓட்டுப்பதிவு நடந்தது. டெல்லி நாடாளுமன்றம், ஒவ்வொரு மாநிலங்களின் சட்டசபைகளில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிதத்தனர்.

99.18 சதவீத ஓட்டுப்பதிவு
கடந்த 18 ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 4,033 எம்எல்ஏக்கள், 776 எம்பிக்கள் என மொத்தம் 4809 பேர் வாக்கு செலுத்த தகுதியாக இருந்தனர். மொத்தம் 99.18 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இதையடுத்து ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லி எடுத்து செல்லப்பட்டன.
இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 6 லட்சத்து 76 ஆயிரத்து 803 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா 3 லட்சத்து 80 ஆயிரத்து 177 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார். இதன்மூலம் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற பெயரையும், பிரதிபா பாட்டீலுக்கு அடுத்ததாக நாட்டின் 2வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற உள்ளார்.
இந்நிலையில் தான் ஜனாதிபதி தேர்தலில் பதிவான ஓட்டுகள் தொடர்பாக சில முக்கிய விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

எம்பிக்கள் ஓட்டு விபரம்
நாட்டில் மொத்தம் 776 எம்பிக்கள் உள்ள நிலையில் ஒரு எம்பியின் ஓட்டு மதிப்பு 700 ஆகும். தேர்தலில் 763 எம்பிக்கள் ஓட்டளித்தனர். இதில் 540 எம்பிக்கள் திரெளபதி முர்முவுக்கு ஓட்டளித்துள்ளனர். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 208 எம்பிக்கள் வாக்கு செலுத்தி உள்ளனர். 15 ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. எம்பிக்கள் ஓட்டுகள் மூலம் திரெளபதி முர்முவின் பெற்ற வாக்கின் மதிப்பு 3 லட்சத்து 78 ஆயிரமாகவும், யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 1 லட்சத்து 45 ஆயிரத்து 600 ஆக இருந்தது.
Recommended Video

எம்எல்ஏக்கள் ஓட்டு விபரம்
இதில் மொத்தம் 3991 எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். திரெளபதிக்கு 2,284 எம்எல்ஏக்களும், யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1,699 எம்எல்ஏக்களும் ஓட்டளித்தனர். மொத்தம் 38 எம்எல்ஏக்களின் ஓட்டுக்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 287 எம்எல்ஏக்கள் மூலம் 59,696 மதிப்புடைய வாக்குகளை பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 215 எம்எல்ஏக்கள் மூலம் 32,616 மதிப்புடைய வாக்குகள் கிடைத்தது.

தமிழகத்தில் எவ்வளவு?
தமிழகத்தில் மொத்தம் 234 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒரு எம்எல்ஏ ஓட்டு என்பது 176 மதிப்பாக உள்ளது. 234 பேரும் ஓட்டுகள் செலுத்திய நிலையில் திரெளபதி முர்முவுக்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 75 எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். திமுக கூட்டணியை சேர்ந்த 159 எம்எல்ஏக்களில் 158 பேரின் ஓட்டுகள் யஷ்வந்த் சின்ஹாவுக்கு கிடைத்தது. ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக யஷ்வந்த் சின்ஹாவுக்கு அதிகமாக வாக்குகள் கொடுத்த மாநிலத்தில் 27 ஆயிரத்து 808 மதிப்புடன் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

திரெளபதிக்கு குறைந்த ஆதரவு எங்கே?
அதேநேரத்தில் திரெளபதி முர்முவுக்கும் சில இடங்களில் ஆதரவு குறைந்த அளவில் மட்டுமே கிடைத்துள்ளது. எம்எல்ஏக்கள் அடிப்படையில் பார்த்தால் கேரளாவில் ஒருவர், தெலுங்கானாவில் 3 பேர், பஞ்சாப், கேரளாவில் தலா 8 பேர் என குறைந்த அளவில் ஓட்டுக்கள் பெற்றுள்ளார். இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் திரெளபதி முர்முவுக்கு எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர்.

3 மாநிலங்களில் சின்ஹாவுக்கு பூஜ்ஜியம்
மேலும் ஆந்திரா, நாகலாந்து, சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையாக எம்எல்ஏக்களின் ஓட்டுகள் திரெளபதி முர்முவுக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்ளில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இது அவருக்கு பெரும் பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications