காஷ்மீர் தனி நாடு..இந்தியா முறைகேடாக ஆக்கிரமித்துள்ளது.. பரபரப்பை கிளப்பிய பஞ்சாப் காங் மூத்த தலைவர்
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், காஷ்மீர் தனி நாடு என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் சட்ட விரோதமாகக் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பஞ்சாப் காங்கிரஸில் கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி பூசல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அங்கு கேப்டன் அமரிந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சித்து ஆகியோருக்கு இடையே மோதல் உச்சத்தில் இருந்தது
இது தொடர்பாகப் பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நவ்ஜோத் சித்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து நிலைமை சற்றே சீரான நிலையில், இப்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

காஷ்மீர் தனி நாடு
நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு, அவருக்கு நான்கு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். நவ்ஜோத் சித்துவின் ஆலோசகர்களில் ஒருவரான மல்விந்தர் சிங் மாலி தான் இப்போது புதிய சர்ச்சைக்கு நெருப்பைப் பற்ற வைத்துள்ளார். காஷ்மீர் குறித்து மல்விந்தர் சிங் மாலி தனது ட்விட்டரில், "காஷ்மீர் தனியொரு நாடு. இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை முறைகேடாக ஆக்கிரமித்துள்ளன. காஷ்மீரிகளுக்கு சொந்தமான பகுதி தான் காஷ்மீர்" எனப் பதிவிட்டுள்ளார். மல்விந்தர் சிங் மாலியின் இந்த பதிவு மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

எதிர்க்கட்சிகள் தாக்கு
மல்விந்தர் சிங்கின் இந்த பதிவு சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ரம் மஜிதியா தெரிவித்துள்ளார். அதேபோல பாஜகவும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளது. காஷ்மீரில் இயங்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பல இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளதாகவும் நவ்ஜோத் சித்துவுக்கு பாகிஸ்தான் மீது பாசம் அதிகமாக உள்ளதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.

கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு
நவ்ஜோத் சித்து நிலையற்ற அரசியல்வாதி என விமர்சித்துள்ள பாஜக, அவர் இந்தியாவில் இருந்தாலும் அவரது மனம் வேறு எங்கேயோ உள்ளதாக விமர்சித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் மல்விந்தர் சிங் மாலியின் கருத்துக்குப் பலமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காஷ்மீர் விவகாரம் மிகவும் சிக்கலானது என்பதால் அது குறித்து தேவையில்லாமல் இது போலப் பேசக்கூடாது என்றும் ஒருவர் தனது வரம்புகளைப் புரிந்துகொண்டு பேச வேண்டும் என்றும் பஞ்சாப் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ராஜ்குமார் வெர்கா விமர்சித்துள்ளார்.
Recommended Video

அமைதி காக்கும் நவ்ஜோத் சித்து
இருப்பினும். இது தொடர்பாக நவ்ஜோத் சித்து தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். அதேபோல மல்விந்தர் சிங்கும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மல்விந்தர் சிங் இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் பஞ்சாபில் சாதி ரீதியான கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றச்சாட்டை முன் வைத்துப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசும் மல்விந்தர் சிங்கை, நவ்ஜோத் சிங் சித்து கண்டிக்க வேண்டும் என்ற கருத்தும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே வலுப்பெற்றுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications