பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை.. வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் - வெடித்த ராகுல்காந்தி
டெல்லி : தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை எனவும், இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த தகவல் வெளியான நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணையே அருகில் வசிக்கும் மக்கள் கொடூரமாக தாக்கினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், சில பெண்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கினர். பெண் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெண்ணை தாக்கியதாக 14 வயது சிறுவன் 8 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட நிகழ்வுக்கு கடும் கண்டனங்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "20 வயது பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ நமது சமூகத்தின் மிகவும் கவலைக்கிடமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications