டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு.. கம்பீரமாக பங்கேற்க இருக்கும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி
டெல்லி: குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் முடிவில் தமிழகம் உள்பட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் கடந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

மு.க ஸ்டாலின் கடிதம்
தமிழக அரசின் ஊர்தி இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார். இருந்தாலும் தமிழக அரசின் ஊர்திக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை எனவும் அதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் நிபுணர் குழுதான் முடிவு செய்வதாக கூறியிருந்தது.

குடியரசு தின விழா
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் கூட எழுப்பப்பட்டு இருந்தது. டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்காக பல்வேறு மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார்.

அனுமதி கொடுக்கப்படுமா?
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிபது அதிபர் கலந்து கொள்கிறார். இந்தக் குடியரசு தின விழாவின் போது மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் வழக்கம் போல் இடம் பெறுகின்றன. கடந்த முறை தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டு அனுமதி கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தி அணி வகுப்பில் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி
குடியரசு தின ஊர்வலத்திற்கு தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி அலங்கார ஊர்திகளை அமைக்கும் பணியை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியின் கண்டோன்மெண்ட் பகுதியில் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications