இந்தியா வந்தது ரஷ்யாவின் "ஸ்புட்னிக் வி" வேக்சின்.. அடுத்த வாரமே மக்கள் பயன்பாட்டிற்கு வரும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் தற்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. அடுத்த வாரம் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக பாரத் பயோடெக், ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர்செனகா, பெசிபர், ஜான்சனன் ஜான்சான், மாடர்னா உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேக்சின்களை உருவாக்கி உள்ளது. ரஷ்யா சார்பாகவும் ஸ்புட்னிக் வி உருவாக்கப்பட்டது.

ரஷ்ய அரசு சார்பாக உருவாக்கப்பட்ட இந்த வேக்சின் அங்கு முதல் கட்டமாக ராணுவத்திடம் சோதனை செய்யப்பட்டு பின் மூன்று கட்ட சோதனைகளை கடந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. கொரோனாவிற்கு எதிராக ஒரு நாட்டு அரசு அனுமதி அளித்த முதல் வேக்சின் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா

ரஷ்யா

இந்த ஸ்புட்னிக் வி வேக்சின் உருவாக்கப்பட்ட போதில் இருந்தே இந்தியா இதை வாங்கும் முடிவில் இருந்தது. ரஷ்யாவும் இந்த ஸ்புட்னிக் வி வேக்சினை இந்தியாவில் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் முடிவில் இருந்தது. இதற்காக டாக்டர் ரெட்டி ஆய்வகத்துடன் ரஷ்யா ஒப்பந்தமும் செய்தது.

இந்தியா

இந்தியா

இந்த நிலையில் தற்போது ஸ்புட்னிக் வி வேக்சின் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த வேக்சின் அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு கிடைக்கும். இந்தியாவிற்கு வந்த டோஸ்கள் பிரித்து அளிக்கப்படும். இது முதல் கட்ட ஏற்றுமதிதான்.

உற்பத்தி

உற்பத்தி

விரைவில் மேலும் ஸ்புட்னிக் வி வேக்சின் இந்தியா வரும். அதற்கு ஏற்றபடி மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்துள்ளார். அதோடு இந்த வேக்சின் டாக்டர் ரெட்டி ஆய்வகம் மூலம் இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

மக்கள்

மக்கள்

15.6 கோடி வேக்சின்களை உற்பத்தி செய்யும் முடிவில் அந்த நிறுவனம் உள்ளது. ஸ்புட்னிக் வி வேக்சின்களை மொத்தம் 2 பில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய அந்த ஆய்வகம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் கடந்த ஏப்ரல் 12ம் தேதி அனுமதி பெற்றது.

தட்டுப்பாடு

தட்டுப்பாடு

இந்த வேக்சினுக்கு 91.6% கொரோனா தடுப்பாற்றல் உள்ளது. இதுவரை செய்யப்பட சோதனைகளில் எல்லாம் இந்த வேக்சின் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி வேக்சின் வருகையால் இந்தியாவில் வேக்சின் தட்டுப்பாடு கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+