டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மே 1ம் தேதி வருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்.. இந்தியர்களுக்கு 3வது தடுப்பூசி

Google Oneindia Tamil News

டெல்லி: ரஷ்யாவின் கொரோனாவைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் வி-யின் முதல் தொகுப்பு மே 1ம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளது.

இந்தத் தகவலை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிர்ரில் டிமிட்ரியேவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Russia to send its Coronaviurs vaccine to India on May 1

இதற்கிடையே, ரஷ்யாவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான பார்மசினிடெஸ் இந்தியாவுக்கு ரெம்டெசிவர் மருந்தையும் சப்ளை செய்யவுள்ளது. முதல் கட்டமாக 10 லட்சம் ரெம்டெசிவர் மருந்து பேக்குகள் மே இறுதியில் இந்தியாவுக்கு வரவுள்ளன.

இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 850 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை அனுப்ப ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 5 நிறுவனங்கள் இந்த மருந்தைப் பெற்று இந்தியா முழுவதும் விநியோகிக்கவுள்ளன.

மனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டுமனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டு

முதல் கட்டமாக எத்தனை டோஸ் மருந்து இந்தியாவுக்கு வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மே 1ம் தேதி முதல் இந்தியாவுக்கு சப்ளை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார் டிமிட்ரியேவ்.

இந்தியாவில் 2வது கொரோனா அலை விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட இந்தியாவில் மிகப் பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவிலும் பாதிப்பு அதிகம் உள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் தப்பவில்லை.

தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என 2 தடுப்பு மருந்துகள் மக்களுக்கு தரப்பட்டு வருகின்றன. இதில் 3வது மருந்தாக இணைகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்.

அதேபோல மாடர்னா மற்றும் ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகளையும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர்கள் மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

English summary
India will receive the first batch of Russia’s COVID-19 vaccine on May 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X