எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது - முருகேஷ்க்கு பால புரஸ்கார் விருது
2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை சிறுகதைத் தொகுப்பை எழுதிய எழுத்தாளர் அம்பை சாகித்ய அகாடமி விருது பெறுகிறார்.
டெல்லி: 2021ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பை என்ற சி.எஸ் லட்சுமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதை தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாடமி விருது பெறுபவர்களுக்கு தாமிரபட்டயமும் ரூ.1,00,000 ரொக்கமும் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். தாமிர பட்டயம் விருதுடன் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும்.

77 வயதாகும் அம்பை சிறந்த பெண் எழுத்தாளர் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற நூல் 2021 ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த சிறுகதைத் தொகுப்பாக சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பால புரஸ்கர் சாகித்ய விருது
அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற சிறுகதை தொகுப்பிற்காக எழுத்தாளர் மு.முருகேசுக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, ஹைகூ, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக மு.முருகேஷ் எழுதி வருகிறார். 2010ஆம் ஆண்டு முருகேஷ் எழுதிய குழந்தைகள் சிறுகதைகள் என்ற நூல் தமிழக அரசின் புத்தக பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது.

கவிஞர் மு.முருகேஷ், வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து சமூகம், கல்வி மற்றும் கலை இலக்கியப் பணிகளில் ஆர்வத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். இதுவரை 42க்குகும் மேற்பட்ட கதை, கவிதை ,
கட்டுரை, சிறுவர் இலக்கியம், விமர்சன நூல்களைப் படைத்துள்ள இவர், தனது நூல்களுக்காக 25க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அவை நூல்களாகவும் வெளிவந்துள்ளன. 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' நூலுக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

இதனிடையே விருது பெற்ற எழுத்தாளர்களை முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் வாயிலாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட் பதிவுகளில்.. தனது 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக #SahityaAkademi விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்! தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும். கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' என்ற படைப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்! சிறார்களுக்கான எளிய - இனிய படைப்புகள் தமிழில் செழித்திட இந்த விருது ஊக்கம் அளிக்கட்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications