உ.பி.யில் புல்டோசரில் வீடுகளை இடிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. பழிவாங்க கூடாது என அட்வைஸ்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க. அரசால் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலேமா ஏ ஹிந்த் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, உ.பி.யில் வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. அதேநேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம், உ.பி. அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் அவதூறாக இழிவுபடுத்தினர். இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாக வெடித்தது.

நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்த 3-ந் தேதி போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடத்தினர். இந்த போராட்டம் மிக மோசமான மதவன்முறையாக வெடித்தது.
இதனையடுத்து மத மோதலில் ஈடுபட்டவர்கள் என இஸ்லாமியர்கள் சிலரை அடையாளப்படுத்தி அவர்களது வீடுகளை புல்டோசர்கள் மூலமாக உ.பி. அரசு இடித்து தரைமட்டமாக்கியது. இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜமியத் உலேமா ஏ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, விக்ரம்நாத் ஆகியோர் பெஞ்ச் முன்பாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது உ.பி.யில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உரிய விதிகளை பின்பற்றி இடிக்க வேண்டும்; உரியவிதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அனுமதிக்க முடியாது. உ.பி.யில் வீடுகளை இடித்தது தொடர்பாக 3 நாட்களில் மாநில அரசு விளக்கம் தர வேண்டும். மேலும் உத்தரப்பிரதேசத்தில் வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்க முடியாது; அதேநேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூடாது என நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications