Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு! மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்து பொங்கிய.. பார் அசோசியேஷன் தலைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, வழக்கை மறு விசாரணை செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு, பார் அசோசியேஷன் தலைவர்(SCBA) கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், இந்த கடிதம் எழுதுவதற்கு பார் அசோசியேஷன் அனுமதியை அவர் பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பத்திரங்கள் மீது உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருந்தது மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதாவது, அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.

SCBA President s letter to the President regarding election bonds has been criticized

இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

ஆனால் இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், எனவே இதனை தடை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து 'தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என்று கூறி தேர்தல் பத்திரங்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

மட்டுமல்லாது, இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதை பெற்று தங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் ஒரு வழியாக நேற்று இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி வழங்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ.11,733 கோடி நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன. இதில் பாஜக மட்டும் ரூ.6,566 கோடி பெற்றிருக்கிறது. அதாவது மொத்த தேர்தல் பத்திரங்களில் 58.5% நிதி பாஜகவுக்கும் மட்டும் கிடைத்திருந்தது. பாஜக தவிர காங்கிரஸ் ரூ.1,123 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,092 கோடியும் நன்கொடையாக பெற்றிருக்கிறது.

இதில் எந்த கட்சி யார் யாரிடமிருந்து எவ்வளவு நிதி பெற்றிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவர உள்ள நிலையில், உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், "அரசியலமைப்பை சீர்குலைக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது. தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது, வழக்கை மீண்டும் விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த கடிதம் எழுத பார் அசோசியேஷனின் அனுமதியை ஆதிஷ் அகர்வாலா பெறவில்லை என அசோசியேஷன் செயற்குழு சார்பில் செயலாளர் ரோஹித் பாண்டே கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்களை ஆதிஷ் அகர்வாலா குறைத்து மதிப்பிட்டிருக்கிறார்" என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பார் அசோசியேஷன் தலைவர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதும், அதற்கு பார் அசோசியேஷன் செயற்குழு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+