டெல்டா அல்லது டெல்டா பிளஸ், எந்த வைரஸ் ஆபத்தானது? இரண்டாவது அலைக்கு பின்னால் உள்ள தகவல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் முழுமையாக அடங்கவில்லை. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலைக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது டெல்டா வைரஸ்தான்.

டெல்டா, டெல்டா பிளஸ்

டெல்டா, டெல்டா பிளஸ்

டெல்டா மாறுபாடு இந்தியாவில் மட்டுமல்ல 84 நாடுகளிலும் கடும் பாதிப்பை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து டெல்டா வைரஸ் மாறுபாடு, டெல்டா பிளஸ் வைரஸாக பிறழ்வு அடைந்தது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், டெல்டா பிளஸ் வேரியன்ட் இதுவரை 11 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்படுத்துமா?

பாதிப்பு ஏற்படுத்துமா?

இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் டெல்டா பிளஸ் வேரியண்ட்டை உன்னிப்பாக கண்காணித்து இந்த மாறுபாட்டுக்கு எதிராக தடுப்பூசி செயல்திறன் குறித்து ஆய்வக சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிலைமை இப்படி இருக்க டெல்டாவை விட டெல்டா பிளஸ் மாறுபாடு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அக்கறையின் மாறுபாடு

அக்கறையின் மாறுபாடு

கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கத்திற்குப் பின்னால் டெல்டா ஆதிக்கம் செலுத்தும் வகையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், டெல்டா பிளஸ் அதன் பிறழ்ந்த வடிவமாகும், இது உலகளாவிய அக்கறையின் மாறுபாடாக அறியப்படுகிறது. ஸ்பைக் புரதத்தில் K417N எனப்படும் பிறழ்வை டெல்டா பெற்றதன் விளைவாக டெல்டா பிளஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்டிபாடிகளை தடுக்கும்

ஆன்டிபாடிகளை தடுக்கும்

இந்தியாவில் டெல்டா ப்ளஸின் பாதிப்பு குறைவாக இருந்தாலும், சில பிறழ்வுகள் வைரஸஅதிகமாக்கவோ அல்லது இரண்டாகவோ உதவக்கூடும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் அறிவார்கள். AY.1 மற்றும் AY.2 இரண்டும் டெல்டாவின் பிறழ்வுகள் ஆகும். K417N பிறழ்வு பீட்டா வேரியண்ட்டில் உள்ளது, இது நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்கும் தன்மையைக் காட்டியதாகவும், ஆன்டிபாடிகளைத் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

 விஞ்ஞானிகள் கருத்து

விஞ்ஞானிகள் கருத்து

டெல்டா பிளஸ் மாறுபாடு டெல்டா வகையை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் வேகமாக பரவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வுகள் மற்றும் மரபணு தரவுகளின்படி, டெல்டா பிளஸ் வழக்குகள் 12 மாநிலங்களில் கண்டறியப்பட்டிருந்தாலும் டெல்டா விட டெல்டா பிளஸ் வேகமாக உயரவில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தடுப்பூசிக்கு எப்படி?

தடுப்பூசிக்கு எப்படி?

கோவிஷீல்டின் ஒரு டோஸ் கூட டெல்டா வகைக்கு எதிராக கடுமையான நோய் மற்றும் மருத்துவமனைக்கு செல்வதில் இருந்து பாதுகாப்பதில் 70% க்கும் மேல் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் டெல்டா பிளஸைப் பொறுத்தவரை தடுப்பூசிக்கு கட்டுப்படுமா? என்பது தெளிவாக தெரியவில்லை.''டெல்டா பிளஸ் பிறழ்ந்த மாறுபாடு பற்றிய கூடுதல் தரவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+