ஆம்பளைங்க மேல நம்பிக்கையில்ல! சிவனும் சக்தியும் நானே! தன்னை தானே கல்யாணம் செய்து கொண்ட நடிகை கனிஷ்கா
டெல்லி : ஆண்கள் மீது நம்பிக்கை நம்பிக்கை இல்லாமல் தனியாக வாழ்வதே சிறந்தது என தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த நடிகை கனிஷ்கா சோனி தற்போது தன் மீது எழுந்திருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
Recommended Video
தற்போதைக்கு இதுதான் ட்ரெண்ட் என்பது போல பெண்கள் பலரும் ஆண்கள் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி தங்களை தாங்களே திருமணம் செய்து கொள்வதாக அதிரடி முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இது சகஜமாக இருந்தாலும் இந்தியாவில் இது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி கடும் கண்டனங்களை பெற்றது.

சுய திருமணம்
இது ஒரு புறம் இருந்தாலும் குஜராத்தை சேர்ந்த நடிகை ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வதாக கூறினார். பவித்ரா ரிஷ்தா என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடித்து இந்திய அளவில் பிரபலமான கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

எந்த ஆணும் தேவையில்லை
அதில்,"எனது கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றியதில் இருந்து என்னையே திருமணம் செய்து கொண்டேன், நான் காதலிக்கும் ஒரே நபர் நானே. நான் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில், எனக்கு எந்த ஆணும் தேவையில்லை... நான் மகிழ்ச்சியாக எப்போதும் தனியாகவும் தனிமையிலும் என் கிடாருடன் இருக்கிறேன். நானே தெய்வம் சிவன் மற்றும் சக்தி அனைத்தும் எனக்குள் உள்ளது" என பதிவிட்டிருந்தார்.

கலாச்சார சீர்கேடு
இந்தியாவில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இரண்டாவது பெண்ணாக கனிஷ்கா சோனி தன்னை வெளிப்படுத்திய நிலையில் தனியாக வாழ்வது சிறந்தது என தாலி குங்குமத்துடன் திருமண புகைப்படத்தை அவர் வெளியிட்டதோடு தனது முழு மனதுடன் இந்த முடிவை எடுத்திருந்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்ற கலாச்சார சீர்கேடுகளை அனுமதிக்க கூடாது என பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர், இது ஒரு புறம் இருக்க கனிஷ்கா சூனியின் instagram பக்கத்தில் முகாமில் நெட்டிசன்கள் பலரும் அவரது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தனர்,

தக்க பதிலடி
இந்த நிலையில் அவர்களுக்கு கேள்விகளுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து இருக்கிறார் கனிஷ்கா. இதுகுறித்து அவர் மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில்,"என்னுடைய சுய திருமண முடிவு குறித்து நீங்கள் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள் என்று எனக்குத் தெரியும், நான் இந்திய கலாச்சாரத்தை உண்மையாக நம்புகிறேன், அதனால்தான் நான் தனிமையில் வாழத் தேர்ந்தெடுத்தேன். திருமணம் என்பது செக்ஸ் பற்றியது அல்ல, ஒருவர் தேடும் அன்பு மற்றும் நேர்மை பற்றியது

நோக்கம் இல்லை
அந்த நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன், எனவே வெளி உலகில் தேடுவதை விட தனியாக வாழ்வதும் என்னை நேசிப்பதும் சிறந்தது, ஆனால் கூகிள் டிரெண்டிங்கிலும் செய்திகளிலும் எனது போஸ்டை பிரபலமாக்கியதற்கு மிக்க நன்றி இருந்தாலும்... அது என் நோக்கம் இல்லை. இது எனது முழு மனதுடன் எடுக்கப்பட்ட முடிவு, நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன் மற்றும் எனது வாழ்க்கையில் கவனம் செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்." என கூறியுள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications