என்டிஏனா “தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை”.. ”நோ டேட்டா கவர்ன்மெண்ட்”.. பாஜகவை கிண்டலடித்த ப.சிதம்பரம்
டெல்லி : ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறந்தது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்று கூறிய மத்திய அரசை கிண்டலடித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், என்டிஏ என்றால் நோ டேட்டா கவர்ன்மென்ட் என கூறியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.
கொரோனா காலத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்ததாக கடுமையான வாதங்களை முன்வைத்தார். மேலும் காங்கிரஸ் கட்சி நாட்டை பிரித்தாள் நினைப்பதாகவும், துக்டே துக்டே ( சின்ன சின்ன ) கும்பல்களின் தலைவனாக காங்கிரஸ் கட்சி இருப்பதாகவும் கடுமையாக சாடினார்.

நகர்ப்புற நக்சல்கள்
காங்கிரஸ் கட்சியின் சிந்தனையை நகர்ப்புற நக்சல்கள் அபகரித்துள்ளனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாக தாக்கி பேசினார். காங்கிரஸ் இல்லையென்றால் எமர்ஜென்சி இருந்திருக்காது, ஜாதி அரசியல் இருக்காது என்றும், டெல்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும், காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றம் நடந்திருக்காது என்றும் பிரதமர் கூறினார். இதனால் தான் காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி முன்கூட்டியே கலைக்க விரும்பினார் என்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி பேசியிருந்தார்.

தரவுகள் இல்லை
இந்நிலையில் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸை துக்டே துக்டே கும்பல் என்று வசை பாடுகிறார். ஆனால் எதிர்க் கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க அவர்களிடம் தரவுகள் இல்லை என கூறினார். கடந்த காலங்களில் துக்டே துக்டே கும்பலை சேர்ந்தவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது தரவுகள் இல்லை என்று அரசாங்கம் ஒப்புக் கொண்டது எனவும், தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று மத்திய அரசின் அமைச்சர் அப்போது கூறினார் எனவும் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நோ டேட்டா கவர்மெண்ட்
ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட இறப்புகள், கங்கை நதியில் கொரோனா காரணமாக மிதந்த உடல்கள், புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வது பற்றிய தரவு எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்று ராஜ்யசபாவில் கூறிய ப.சிதம்பரம் "இது தரவுகள் கிடைக்காத NDA அரசாங்கம்' என்று கூறினார். எமர்ஜென்சியை விதித்ததற்காக காங்கிரஸின் மீதான தாக்குதலுக்கு பதிலளித்த சிதம்பரம், காங்கிரஸ் இல்லாதிருந்தால், இந்த சபை இன்னும் இந்திய அரசுச் சட்டம் 1919இன் கீழ் இளவரசர்கள் கவுன்சிலின் கீழ் இருந்திருக்கும் என்றும், எங்களுக்குப் பதிலாக ராணி இரண்டாம் எலிசபெத் ராணியைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள் என்றார்.

காங்கிரஸுக்கும் கடவுளுக்கு நன்றி
காங்கிரஸுக்கும் கடவுளுக்கும் நன்றி எங்களுக்கு ஒரு ராஜ்யசபா தக்கவைத்ததற்காக என கூறிய ப.சிதம்பரம், பட்ஜெட் உரையில் எனக்குப் பிடித்தது என்னவென்றால் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில் இது மிகக் குறுகியதாக இருந்தது. நன்றி மேடம் நிதியமைச்சர் எனவும், ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் கூறினார். தொழிலாளர் தொகுப்பில் ஆண்டுக்கு 47.5 லட்சம் பேர் கூடுதலாக உள்ளனர் என்றும் அவர் கூறினார். மற்றவர்கள் என்ன செய்வார்கள்? பகோடாவை வறுத்து விற்கவா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications